நிச்சயம் உலக கோப்பையை இந்திய அணி வெல்லும்!வார்னர் ,ஸ்மித் இருந்தாலும் வெற்றி இந்தியாவிற்கே!பேச்சில் வால்வீசி கூறிய அதிரடி மன்னன்

Default Image

இந்திய கிரிக்கெட்  அணியின் முன்னால் அதிரடி வீரர் விரேந்தர்  சேவாக்,  இங்கிலாந்தில் நடைபெறும் 2019 உலகக்கோப்பையை விராட் கோலி தலைமை இந்திய அணி வெல்லும், அதே போல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வார்னர், ஸ்மித் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்திய அணி வெல்லும் என்று அடித்துக் கூறுகிறார் சேவாக்.

கொல்கத்தாவில் விளம்பரதாரர் நிகழ்ச்சி ஓன்றில் கலந்து கொண்டபோது சேவாக் கூறியதாவது,நம்மிடம் உள்ள ஒருநாள் அணியைப் பார்க்கும் போது 2019 உலகக்கோப்பையை நாம் தான் வெல்வோம். என்ன நம்ப மாட்டீர்களா? நிச்சயம்தான் நமக்குத்தான் அதிக வாய்ப்பு.

அதே போல் இந்தியாவுக்கு வெளியே டெஸ்ட் தொடரிலும் வெல்லும் திறனுடையது இந்திய அணி, நம்மிடம் அப்படிப்பட்ட பவுலிங் உள்ளது, தென் ஆப்பிரிக்காவில் வெற்றி பெறுவதை நூலிழையில் தவற விட்டோம். இல்லயெனில் வரலாறு படைத்திருப்போம்.

எங்கள் நாட்களில் ஸ்ரீநாத், ஜாகீர் கான், அகார்கர், நெஹ்ரா ஆகிய 4 வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தனர், ஆனால் நால்வரும் ஒரே சமயத்தில் ஆட முடிந்ததில்லை. 2003 உலகக்கோப்பையின் போது சேர்ந்து ஆடினார்கள். அப்போது இறுதிப்போட்டியில் நுழைந்தோம். இப்போதைய அணி எந்தச் சூழலிலும் திறமையுடன் ஆடக்கூடிய அணி.

Image result for virendra sehwag

ஸ்மித், வார்னர் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? இருந்தாலும் வெல்வோம், இல்லாவிட்டாலும் வெல்வோம்.

2 உலகக்கோப்பையை வென்றோம். 2007 டி20 உலகக்கோப்பையை வென்ற போது நிறைய செய்திகள் எங்களை வந்தடைந்தது. இளம் அணி, இளம் கேப்டன். நாங்கள் அந்த உலகக்கோப்பையை வெல்வோம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று இந்திய கிரிக்கெட்  அணியின் முன்னால் அதிரடி வீரர் விரேந்தர்  சேவாக் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்