தோனியிடம் இருந்து நான் இது தான் கற்று கொண்டேன் !தினேஷ் கார்த்திக் ஓபன் டாக் ….
இந்தியா வங்கதேசத்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நிதஹாஸ் கோப்பை முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வீழ்த்தி சாம்பியன் ஆனது.
இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் பங்கேற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா-வங்கதேசம் அணிகள் முன்னேறின. கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வென்றது.
ரோஹித் சர்மா ரன்கள் குவித்தும் தோல்வியை தழுவும் நிலைக்கு சென்றது இந்திய அணி. எனினும், அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி அணியை “த்ரில்’ வெற்றி பெறச் செய்தார்.தன்னுடைய ஆட்டம் குறித்து தினேஷ் கார்த்திக் கூறியதாவது:
இதுபோன்ற ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை அனுபவத்தின் பலனாகக் கிடைப்பது என நினைக்கிறேன். இத்திறமைகளை விலைக்கு வாங்கமுடியாது. அனுபவத்தின் காரணமாகவே கற்றுக்கொள்ள முடியும். இதுபோன்ற இக்கட்டான தருணங்களை நிதானமாகக் கையாள வேண்டும். இதற்கு தோனியின் ஆட்டங்கள் சிறந்த உதாரணம். அவர் எவ்வளவு நிதானத்துடன் கையாள்வார் என்பதைப் பார்த்துள்ளோம். இவரைப் போன்றவர்களிடமிருந்து நீங்கள் நிறைய கற்றுக்கொள்ள முடியும். ஒரு ஆட்டத்தை எப்படி வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதை தோனியிடமிருந்து கற்றுக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.