தினேஷ் கார்த்திக் அடியில் வென்றது மறக்க முடியாத ஒரு உணர்வு !

Published by
Venu

நிதஹாஸ் கோப்பை டி20 முத்தரப்பு தொடரில் இந்திய டி20 அணியின் வளரும் புதிய ஆஃப் ஸ்பின் வீரர் வாஷிங்டன் சுந்தர்  அருமையாக வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அதுவும் பேட்ஸ்மென்கள் புத்துணர்வுடன் களமிறங்கும் போது பவர் பிளேயில் பந்து வீசும் கலையில் அவர் நிறைய தேறி வருகிறார்.

ஆட்டத்தில் சூடுபறக்கும் தருணங்களில் வாஷிங்டன் சுந்தர் மிகவும் கூலாக வீசுவது இவரது பலம். இன்று ரிஸ்ட் ஸ்பின் என்று கூறி அஸ்வினை ஓரங்கட்டிய பிறகே விரல்களால் வீசும் பாரம்பரிய ஸ்பின் இனி எடுபடாது என்ற பிரச்சாரங்களை மீறி வாஷிங்டன் சுந்தர், அதுவும், குறைந்த ஓவர் போட்டிகளில் அசத்துவது விரல்களின் மூலம் வீசும் ஸ்பின்னர்களுக்கு ஒரு புத்துணர்வூட்டுவதாக் அமைந்துள்ளது. இவரது ஆல் ரவுண்ட் திறமைக்கு இன்னும் வாய்ப்புக் கிடைக்கவில்லை, அந்த வாய்ப்பும் கிடைத்து திறமையை நிரூபித்தால் இந்திய அணியில் இவருக்கு ஒரு நிரந்தர இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

அதுவும் ஒழிந்து விட்டதாக கடுமையாகப் பிரச்சாரம் செய்யப்படும் பாரம்பரிய ஆஃப் ஸ்பின் பந்து வீச்சில் சிறந்த சிக்கன விகிதத்துடன் அதிக விக்கெட்டுகளையும் ஒரு தொடரில் கைப்பற்றி தொடர் நாயகன் விருது பெற்றிருப்பது சாதாரணமல்ல. யஜுவேந்திர சாஹலும் இவரும் 8 விக்கெட்டுகள். எனவே இருமுனைகளிலும் ரிஸ்ட் ஸ்பின் தோல்வியடையும் போது ஒரு முனையில் இந்த பாரம்பரிய ஸ்பின் பந்து வீச்சே கைகொடுக்கும் என்பதற்கு வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சு ஒரு உதாரணம், ஆனால் அவர் தன் திறமையை தொடர்ந்து நிரூபிக்க வேண்டி வரும், இன்னும் சவாலான அதிரடி பேட்ஸ்மென்களை இவர் சந்திக்கவில்லை. இவர் நல்ல யார்க்கர் பந்துகளையும் வீசக்கூடியவர் என்று பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண் கூறியுள்ளார்.

ஏரோன் பிஞ்ச், ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், வார்னர் உள்ளிட்டோருக்கு அவர் வீசி நிரூபிக்க வேண்டிய தேவை உள்ளது.

இந்நிலையில் முத்தரப்பு டி20 சாம்பியன் இந்திய அணி திரும்பியுள்ளது, வாஷிங்டன் சுந்தர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறியதாவது:

உண்மையில் பேருணர்வு ஏற்பட்டது மகிழ்ச்சி. எனக்கு வயது 18, ஒரு முழு தொடர் இந்த வயதில் கிடைத்தது. இலங்கையும் வங்கதேசமும் அபாயகரமான அணிகள். எங்களுக்கு நெருக்கடி இருந்தது. மறக்க முடியாத ஒரு வெற்றியாக இது அமைந்தது.

பவுலர் என் பந்தை அடித்தாலும் சோர்ந்து விடாமல் என் அடுத்த பந்து சிறந்ததாக இருக்கும் என்று எனக்கு நானே கூறிக்கொள்வேன். பேட்ஸ்மென்கள் பந்து இங்குதான் பிட்ச் ஆகும் என்று எதிர்பார்ப்பதை முறியடிக்க வேண்டும் என்பதுதான் திட்டம்.

தினேஷ் கார்த்திக் அடியில் வென்றது மறக்க முடியாத ஒரு உணர்வை ஏற்படுத்தியது, தினேஷ் கார்த்திக் சிறப்பான ஒன்றை நிகழ்த்துவார் என்று நம்பினேன், அதுதான் நடந்தது என்று வாஷிங்டன் சுந்தர் கூறினார் .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி – பானை சின்னம் வழங்கிய தேர்தல் ஆணையம்!

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி – பானை சின்னம் வழங்கிய தேர்தல் ஆணையம்!

சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…

25 minutes ago

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டி – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…

1 hour ago

“ஹிந்தி தேசிய மொழி இல்லை…அஸ்வின் சொன்னது சரி தான்” – அண்ணாமலை!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…

1 hour ago

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி!

சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…

10 hours ago

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் நியமன குழப்பம்! அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…

10 hours ago

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…

12 hours ago