கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொள்வதாக இருந்த திட்டத்தை ரத்து செய்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வார காலமாகவே தமிழகம்
போராட்டக்களமாகவே மாறியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திமுக உள்ளிட்ட
எதிர்கட்சிகள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன. ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு
தெரிவித்துள்ளனர். நாளைய தினம் நடைபெறும் போட்டிக்கு செல்ல வேண்டாம் என்றும் அவர்கள் கூறி வருகின்றன.
இதனால், சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றிலும் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் சென்னையில் தங்கியுள்ள ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு
அளிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் சிஎஸ்கே அணியில் தோணி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் சுரேஷ் ரெய்னா, நெல்லை மாவட்டம்,
வள்ளியூர், வடக்கன்குளத்தில் உள்ள கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொள்வதாக திட்டமிட்டிருந்தார். சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு
எழுந்துள்ள நிலையில் கல்லூரி நிகழ்ச்சியை சுரேஷ் ரெய்னா ரத்து செய்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கும்.…
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…
சென்னை: அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக, நாதக, பாமக உள்ளிட்ட காட்சிகள்…