சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை மஞ்சள் நிறமாக மாற்றிய விசில் அணி ரசிகர்கள்!சென்னை சிங்கங்களுடன் புனேவிற்கு படையேடுக்கும் #WhistlePoduExpress
ஐபிஎல் போட்டிகள் சூடுப்பிடித்திருக்கும் நிலையில், நாளை புனேவில் நடக்கவுள்ள சென்னை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியைக்காண சென்னை அணி ரசிகர்கள் சிறப்பு ரயில் மூலம் இன்று புனே சென்று கொண்டிருக்கிறார்கள்.
2 வருட தடைக்குப் பின் இந்த ஆண்டு களம் கண்டிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தற்போது ஐபிஎல் போட்டிகளில் கலக்கி வருகிறது.
மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி தனது வெற்றி பயணத்தை தொடங்கி, அடுத்து சென்னையில் நடந்த கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்திலும் வாகைச் சூடியது.
ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தில் தமிழகத்தில் போராட்டம் நடந்து வருவதால், சென்னையில் போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் மெரும் ஏமாற்றம் அடைதுள்ளனர். இந்நிலையில், சென்னையில் நடக்கவிருந்த ஆட்டங்கள் அனைத்தும் புனே மாநிலத்துக்கு மாற்றியது ஐபிஎல் நிர்வாகம்.
இதனிடையே, சென்னை ஆட்டத்தை பார்க்க சென்னையில் இருந்து ரசிகர்கள் குழு, இன்று சென்னை அணி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ரயில் மூலம் புறப்பட்டு புனே சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாக பொறுப்பாளர்கள் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தனர்.
ரசிகர்கள் அனைவரும் மஞ்சல் நிற டி-சர்ட்டுகள் அணிந்தும், ரயிலில் பேனர்கள் கட்டியும் உற்சாகமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனை #WhistlePoduExpress என்னும் ஹாஸ்டாகின் கீழ் புகைப்படம், வீடியோ என எடுத்து தங்களின் பயணத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். நிறைய ரசிகர்கள் கூடியதால் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் சற்று நேரம் மஞ்சல் நிறமாக காட்சியளித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.