பிசிசிஐ , ஏப்ரல் 7ம் தேதி நடக்க இருக்கும் ஐபிஎல் துவக்க விழாவில் ரோஹித், தோனியை தவிர மற்ற 6 அணிகளின் கேப்டன்கள் கலந்து கொள்ள அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது.
ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளின் கேப்டன்களாக விராட் கோலி, அஷ்வின், கவுதம் கம்பிர், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், தினேஷ் கார்த்திக், ரோஹித் சர்மா, தோனி ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஐபிஎல் போட்டி துவங்குவதற்கு முந்தைய நாளான 6ம் தேதி, ஸ்பெஷல் வீடியோ ஷூட்டில் கலந்து கொள்கின்றனர்.
இதனை தொடர்ந்து போட்டி நடக்க இருக்கும் ஏப்ரல் 7ம் தேதிக்கு முன்னதாக துவக்க விழா நடைபெறும். இதில் அன்று மோதும் மும்பை மற்றும் சிஎஸ்கே அணி கேப்டன்கள் ரோஹித் மற்றும் தோனி மட்டும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், மற்ற 6 அணிகளின் கேப்டன்கள் துவக்க விழாவில் பங்கேற்க அவசியமில்லை என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
கடந்த ஐபிஎல் சீசன் வரை, அனைத்து அணி கேப்டன்களும் ஐபிஎல் துவக்க விழாவில் கலந்து கொண்டு, ‘ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்’ உறுதிமொழியை கையெழுத்திட வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. ஆனால், இந்த முறை துவக்க விழாவுக்கு அடுத்த நாளில் நடக்க இருக்கும் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்வதற்கான போதுமான கால அவகாசம் கேப்டன்களுக்கு இல்லாத காரணத்தினால்,விழாவில் மற்ற 6 கேப்டன்கள் பங்கேற்பது அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…