சிக்ஸ் அடித்து வென்ற பிறகே நாட்கள் ஓடிவிட்டன…!கடைசி பந்து சிக்ஸ் வெற்றிக்குப் பிறகே அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்…!

Published by
Venu

 தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டனாக  பொறுப்பேற்றுள்ள நிலையில், தனக்கு அழுத்தம் உள்ளது என்றும் எனினும் அதனை சிறப்பாகக் கையாள முடியும் என்றும் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

கம்பீர் தலைமையின் கீழ் கொல்கத்தா அணி ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் 2012, 2014-ல் சாம்பியன் பட்டம் வென்றது, மேலும் 2011, 2016, 2017-ம் ஆண்டுகளில் பிளே ஆஃப் சுற்றுவரை வந்தது.

 

இந்நிலையில் அணியின் புதிய சீருடை அறிமுக நிகழ்ச்சியில் கொல்கத்தாவில் தினேஷ் கார்த்திக் கூறியதாவதுகேகேஆர் அணிக்கு கவுதம் கம்பீர் செய்தது பிரமிக்கத்தக்கது. அவர் ஒரு தரநிலையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அணியின் தலைவராக அணி நிர்வாகம் கவுதம் கம்பீர் போலவே என்னிடமும் அதிகம் எதிர்பார்க்கும். ஆம் அழுத்தம் உண்டு. ஒரு கேப்டனாக அணி பிளே ஆஃப் வரை முன்னேற வேண்டுமென்று என்னிடம் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இப்போது இவ்வகை அழுத்தத்தை நான் கையாளும் நம்பிக்கையில்தான் இருக்கிறேன். வீரர்களிடமிருந்து சிறந்தவற்றை என்னால் வெளிக்கொண்டு வர முடியும்.

வங்கதேசத்துக்கு எதிரான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டியில் சிக்ஸ் அடித்து வென்ற பிறகே நாட்கள் ஓடிவிட்டன, அதன் பிறகு எல்லாம் மாறிவிட்டன, ரசிகர்களும் அதிலிருந்து நகர்ந்து விட்டனர். நான் ஏற்கெனவே கூறியது போல் அது ஒரு அருமையான ஆட்டம். வங்கதேசத்துடன் ஆடும்போது அது இன்னொரு வகையான அழுத்தம், வென்றால் ஓகே வங்கதேசத்தை வென்று விட்டோம் என்று கூறுவார்கள் தோற்றால் வங்கதேசத்துடன் தோல்வியா என்ன நடக்கிறது என்பார்கள் என்று ஏற்கெனவே நான் கூறியிருக்கிறேன்.

அந்தப் போட்டியில் நல்ல தொடக்கம் கண்டோம், மிடிலில் கொஞ்சம் சரிவு, நான் இறங்கும்போது பவுண்டரிகள் அடிக்க வேண்டிய கட்டாயம். அந்தத் தொடர் நன்றாக அமைந்தது, ஆகவே இறுதிப்போட்டியில் வென்றிருக்காவிட்டால் ஏமாற்றமாகவே இருக்கும். அது ஒரு மகா உணர்வு.

இந்திய அணி போல் அல்லாமல் இங்கு நான் பல்வேறு நிலைகளில் இறங்குவேன். ஐபிஎல் என்பது சூழ்நிலைகளைச் சமாளிப்பதாகும். இன்னும் ஒருவாரம் இருக்கிறது, நான் என்னை வித்தியாசமாக நடத்திக் கொள்ள மாட்டேன். அனைவருமே இங்கு சிறந்தவற்றை அளிக்கப் போகிறார்கள், நான் ஒன்றும் வித்தியாசம் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு.

என் மனைவி தீபிகா பல்லிக்கல்லிடமிருந்து நான் உறுதிப்பாடையும் கடின உழைப்பையும் கற்றுக் கொண்டேன். காமன் வெல்த் போட்டிகளுக்காக தீபிகா உண்மையில் கடினமாக உழைத்தார்.இவ்வாறு  தினேஷ் கார்த்திக் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

யாரு கேட்டது ரூ.5 கோடி? சந்திரமுகி பட காட்சி விவகாரம்., நயன்தாரா தரப்பு விளக்கம்!

சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…

7 hours ago

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை! 5 இந்திய வம்சாவளியினர் அதிரடி கைது!

நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த…

8 hours ago

பிரியங்கா காந்தி குறித்து சர்ச்சை பேச்சு.! பாஜக வேட்பாளர் வீட்டில் செருப்பு வீச்சு!

டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை…

9 hours ago

HMPV தொற்று எதிரொலி: கர்நாடகாவில் முகக்கவசம் அணிவது கட்டாயம்.!

கர்நாடகா:  சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…

11 hours ago

தமிழகத்தில் நுழைந்ததா HMPV தொற்று? சென்னையில் 2 குழந்தைகளுக்கு பாதிப்பு!

சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…

11 hours ago

நடிகர் அஜித்தின் “குட் பேட் அக்லி” திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ்!

சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10…

11 hours ago