சிஎஸ்கே அணியில் ஒரு தல தான் அது தோனி மட்டும் தான்…!நீ வா தல…!அப்போம் சின்ன தல …தாகிர் ஓபன் டாக் …

Published by
Venu

தென் ஆப்ரிக்கா அணி வீரர் இம்ரான் தாஹிர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தல தோனி மட்டும் தான் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி,20 தொடரான ஐ.பி.எல் தொடர் கோலகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது.

இதில் முதல் தொடரில் இருந்தே பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் தனது இரண்டு வருட தடை காலம் முடிந்து மீண்டும் இந்த தொடரில் ரீ எண்ட்ரீ கொடுக்க உள்ளதால் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது, குறிப்பாக தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு தற்பொழுதே உருவாகிவிட்டது, சென்னை அணியின் பயிற்சியை பார்க்கவே சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்து வருகின்றனர்.

அதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் திறந்த பேருந்தில் சென்னையை சுற்றிப்பார்த்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர் போன்ற வீரர்கள் தங்களது ட்விட்டர் பக்கங்களிலும் தமிழிலேயே ட்வீட் போட்டு மாஸ் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எடுக்கப்பட்ட தென் ஆப்ரிக்கா அணியின் சுழறப்ந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தென் ஆப்ரிக்காவில் இருந்து சென்னை வந்தார். சென்னை வந்துள்ளதை தனது ரசிகர்களுக்கு தெரிவிக்கும் வகையில் “என் இனிய மக்களே, உங்கள் அன்பு சகோதரன் சென்னைக்கு வந்துவிட்டேன்” என்று ட்வீட்டை பதிவு செய்திருந்தார்.
இம்ரான் தாஹிரின் இந்த ட்வீட்டிற்கு சென்னை ரசிகர் ஒருவர் “நீ வா தல” என்று பதிவிட அதற்கு அடுத்த சில நிமிடங்களில் அந்த ரசிகரின் ட்வீட்டிற்கு பதிலளித்த இம்ரான் தாஹிர் அதில் “உங்கள் அன்பிற்கு நன்றி சகோதரா, ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு தல தான் அது தோனி மட்டும் தான்” என்று பதிவிட்டு சென்னை ரசிகர்களை மேலும் பரவசப்படுத்தியுள்ளார்.இந்நிலையில் நாளை முதல் (ஏப்ரல் 2)டிக்கெட் விற்பனை தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

17 mins ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

36 mins ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

48 mins ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

51 mins ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

1 hour ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

2 hours ago