சிஎஸ்கே அணியில் ஒரு தல தான் அது தோனி மட்டும் தான்…!நீ வா தல…!அப்போம் சின்ன தல …தாகிர் ஓபன் டாக் …
தென் ஆப்ரிக்கா அணி வீரர் இம்ரான் தாஹிர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தல தோனி மட்டும் தான் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி,20 தொடரான ஐ.பி.எல் தொடர் கோலகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது.
இதில் முதல் தொடரில் இருந்தே பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் தனது இரண்டு வருட தடை காலம் முடிந்து மீண்டும் இந்த தொடரில் ரீ எண்ட்ரீ கொடுக்க உள்ளதால் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது, குறிப்பாக தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு தற்பொழுதே உருவாகிவிட்டது, சென்னை அணியின் பயிற்சியை பார்க்கவே சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்து வருகின்றனர்.
அதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் திறந்த பேருந்தில் சென்னையை சுற்றிப்பார்த்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர் போன்ற வீரர்கள் தங்களது ட்விட்டர் பக்கங்களிலும் தமிழிலேயே ட்வீட் போட்டு மாஸ் காட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.