சச்சினை வாழ்த்து மழையில் நனைய வாய்த்த பிரபலங்கள் !

Default Image

 தனது 45-வது பிறந்த நாளை  இந்திய கிரிக்கெட் அணியில் ஜாம்பவானாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் நேற்று கொண்டாடினார். இதையொட்டி இந்நாள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலர் அவருக்கு, டுவிட்டரில் வாழ்த்துகள் தெரிவித்தனர். அதன் விவரம்:

விவிஎஸ் லட்சுமண்: நீங்கள் எப்போதும் உத்வேகம் கொடுப்பவராக இருக்கிறீர்கள். ஓய்வுக்குப் பின்னரும் சில நல்ல முன்முயற்சிகளோடு சமூகத்தில் நீங்கள் பங்களிப்புச் செய்வதைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது. எப்போதும் உங்களுக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துகள்.

சேவக்: கிரிக்கெட் மட்டையை பலமான ஆயுதமாக மாற்றி அதை பின்னர் என்னை போன்றவர்களும் பயன்படுத்த வழங்கிய கடவுளுக்கு வாழ்த்துகள்.

சுரேஷ் ரெய்னா: ஒரு பில்லியன் இந்திய மக்களை ஒருங்கிணைத்த மனிதர், ஒவ்வொரு முறையும் மட்டையுடன் களத்தில் புகும்போது அனைவரது முகத்திலும் புன்னகையை கொண்டு வந்தவர், கனவை நிஜமாக்கியவர், சச்சின் ஒரு சகாப்தம்.

கே.எல்.ராகுல்: நீங்கள் ஜாம்பவான், கிரிக்கெட்டின் கடவுள், நீங்கள் ஒவ்வொரு நாளும் என்னை ஊக்குவிக்கிறீர்கள்.

யுவராஜ் சிங், ஹர்பஜன்சிங் உள்ளிட்ட பலரும் சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Tamilnadu CM MK Stalin - ADMK Chief secretary Edappadi palanisamy (2)
Ajith Kumar Racing
Gargi Ranpara (8-year) died yesterday morning at a private school in Ahmedabad
heavy rain ALERT
sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin