கோல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வது முக்கியமல்ல என்று தெரிவித்துள்ளார்.கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற செய்தார். கடைசி பந்தில் இந்திய அணி வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் விளாசி அசத்தினார். 19வது ஓவரில் தினேஷ் கார்த்திக் 22 ரன்கள் குவித்தார். இறுதிப் போட்டியில் அவர் 8 பந்துகளில் 29 ரன்கள் குவித்து அசத்தினார். இந்நிலையில் அவர் தற்போது இந்தியாவின் ஹீரோவாக வலம் வருகிறார்.
இந்நிலையில், இன்று தினேஷ் கார்த்திக் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- “இந்திய அணியில் கிடைத்த இடத்தை தக்கவைக்க சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே முடியும். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவதே எனது நீண்ட நாள் விருப்பம். ஆனால், எந்த வீரர் எந்த அணியில் விளையாட வேண்டும் என்பதை ஐபிஎல் ஏலம் தான் முடிவு செய்கிறது. கொல்கத்தா அணி கேப்டனாக சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பது முக்கிய நோக்கமல்ல. பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டும். அதன்பின் சாம்பியன் பட்டம் வெல்வது பற்றி யோசிக்கலாம்” என கூறியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…