கடைசி போட்டியை மும்பையில் நடத்தியதற்கு காரணம் என்ன?பிறந்த நாளில் ஒருவழியாக வாயைத்திறந்த சச்சின் டெண்டுல்கர் !

Default Image

இந்திய அணியன் முன்னால் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தான் விளையாடிய கடைசி மற்றும் 200 டெஸ்ட் போட்டியை மும்பையில் நடத்தக் காரணம் என்ன என்பது குறித்து  மனம் திறந்து தனது பதிலை தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013-ம் ஆண்டு தனது 200 டெஸ்ட் போட்டியோடு கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக நடந்த இந்த டெஸ்ட் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடத்தப்பட்டது.

கிரிக்கெட்டின் பிதாமகன் சச்சின் ஓய்வபெறும் நிகழ்ச்சியைக் கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சிகளில் காண ஆர்வமாக இருந்தார்கள், அரங்கில் 33 ஆயிரம் ரசிகர்கள் காத்திருந்தனர். ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே அந்தத் தருணத்துக்காக காத்திருந்தது.

ஆனால், சச்சின் டெண்டுல்கர் அந்த ஒருவருக்காகக் காத்திருந்தார். தனது 200-வது டெஸ்ட் போட்டியை காண அவர் வேண்டும், அரங்கில் அமர்ந்து தனது ஆட்டத்தை பார்க்கவேண்டும் என்பது கடைசி ஆசையாக இருந்தது. அதை பிசிசிஐ நிர்வாகத்திடம் கூறியதும் மறுவார்த்தை கூறாமல்,போட்டியை மும்பையில் நடத்த ஒப்புக்கொண்டனர்.

Image result for sachin tendulkar last match his mother

எதற்காக, யாருக்காக மும்பையில் தனது 200-வது டெஸ்ட் போடியை நடத்தினேன் என்று சச்சின் டெண்டுல்கர் நேற்று புத்தக வெளியீட்டு விழாவில் மனம்திறந்து பேசினார். போரியா மஜூம்தார் எழுதிய ‘லெவன் காட்ஸ் அன்ட் எ பில்லியன் இந்தியன்ஸ்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர், ரவி சாஸ்திரி, ரோகித் சர்மா, முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் உள்ளிட்டோர் பங்கேற்றேனர்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய பலரும் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் நடந்த பல்வேறு சுவையான சம்பவங்களை நினைவு கூர்ந்து பேசினார்கள். சச்சினும் சில சம்பவங்களைக் குறிப்பிட்டு பேசினாலும், தனது 200-வது டெஸ்ட் போட்டி மும்பை நடத்துவதற்கான காரணத்தை முதல் முறையாக விளக்கினார்.

அப்போது அவர் கூறியதாவது,நான் என்னுடைய கடைசி மற்றும் 200 டெஸ்ட் போட்டியை மும்பையில் நடத்த விரும்பினேன் என்பதற்கான காரணம் இன்னும் யாருக்கும் தெரியாது. அதை இங்கு கூறுகிறேன். நான் கிரிக்கெட் விளையாட்டைப் பழகிய வயதில் இருந்து, பள்ளியில் கிரிக்கெட் விளையாடியதில் இருந்து இந்திய அணிக்காக 24 ஆண்டுகள் விளையாடியதுவரை ஒரு முறைகூட நான் எப்படி விளையாடுகிறேன் என்பதை என் அம்மா பார்த்தது இல்லை.

கடைசியாக நான் ஓய்வு பெறும்போது அவர் என் விளையாட்டை முதல்முறையாக அரங்கில் வந்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இதற்காக பிசிசிஐ நிர்வாகத்திடம் கூறினேன் அவர்களும் சரி என ஒப்புக்கொண்டனர். என் அம்மாவால் நடக்க முடியாத காரணத்தால், அவரை அழைத்துவர அனைத்துவிதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, வான்கடே விஐபி அறையில் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

என் அம்மா, மனைவி அஞ்சலி, என் நண்பர்கள் என பலரும் வந்திருந்தனர். ஆனால், மேற்கிந்தியத்தீவுகள் அணி டாஸ் வெற்றி பெற்று பேட்டிங்கைத் தேர்வு செய்தனர். உடனே எல்லோரும் வீட்டுக்கு புறப்படத் தயாரானார்கள். அதில் இருந்த என் நண்பர்களில் ஒருவர் நிச்சயம் இன்று மாலைக்குள் இந்தியா முதல் இன்னிங்ஸைத் தொடங்கிவிடும். பொறுமையாக அமருங்கள் என்று கூறி அனைவரையும் அமரவைத்தார்.

அதுபோல் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முதல் இன்னிங்ஸ் முடிந்து மாலைதேநீர் இடைவேளைக்குக்கு பின் இந்திய அணி பேட்டிங் செய்தது. நான் மாலையில் 25 நிமிடங்கள் வரை பேட்டிங் செய்தேன். அன்றைய போட்டியின் கடைசி ஓவரை டேரன் சாமே வீசினார். அவரின் ஓடிவருவதைப் பின்னால் இருந்த மெகா திரையில் என் அம்மா அமர்ந்து என்னுடையவிளையாட்டை பார்ப்பதைப் பார்த்தவுடன் எனக்கு உணர்ச்சிப் பெருக்கில் என்ன செய்வதென்று தெரியவில்லை.

அந்தவிலை மதிக்கமுடியாத தருணத்தை என்னவென்று நான் சொல்வது.என் கிரிக்கெட் விளையாட்டை முதல்முறையாக நேரடியாகப் பார்க்க வந்துள்ளார் என்று நினைத்து மகிழ்ந்தேன். என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு, கண்ணீரை அடக்கிக்கொண்டு பேட்டிங் செய்தேன்.

என்னால் ஒவ்வொரு பந்தையும் கவனம் செலுத்தி விளையாடுவது மிகுந்த கடினமாக இருந்தது. இருந்தாலும் எனக்குள் ஆட்டமிழந்துவிடாதே, கவனமாக பேட்டிங் செய் என்ற உள்ளுணர்வு கூறிக்கொண்டே இருந்தது. அந்த அனுபவத்தை என்னால் இன்றுவரை மறக்கமுடியாது. அதுபோல் இனி நடக்கவும் நடக்காது.

ஒருவிளையாட்டு வீரராக தன்னுடைய கடைசி போட்டி ஒவ்வொருவரும் நினைத்துப்பார்க்கக் கூடியதாக இருக்கும். ஏனென்றால், கடைசி போட்டி எப்படி இருந்தது என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமான கேள்வியாகும். வெற்றியுடன் முடித்தீர்களா, அரங்கில் இருந்த கூட்டத்தினர் எப்படி அணுகினார்கள், அனைத்தும் நினைவில் இருந்தாலும்,

என் குடும்பத்தினர் என் கிரிக்கெட் விளையாட்டைப் பார்த்ததும், என் தாய் முதல்முறையாக, என்னுடைய கடைசி விளையாட்டைப் பார்த்ததும் மறக்க முடியாத தருணங்களாகும். அந்தத்தருணத்தில் என் கண்கள் குளமாகின. நான் மட்டும் உணர்ச்சிப்பெருக்கில் பந்தைக் கவனிக்காமல் விளையாடி இருந்தால், நான் ஆட்டமிழந்து இருப்பேன்.இவ்வாறு சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
BJP State President Annamalai Arrest
Parliament session incidents
PM Modi jaipur Accident
Vidaamuyarchi From Pongal 2025
Spain Andaluz Viilage Street view
actor soori