ஐபிஎல்-லில் முதல் முறையாக அறிமுகமாகும் தோனி ரிவ்யு சிஸ்டம்(DRS)!தோனி ரிவ்யு ஓகே …..
டிஆர்எஸ் ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியில் இந்த வருடம் நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யும் முறை முதல் முறையாக அறிமுகமாகிறது.
பதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரை நடக்கிறது.போட்டி குறித்து ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா கூறும்போது, ‘இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ் முறை, முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு அணியும் ஒரு இன்னிங்சில் ஒரு முறை மட்டுமே நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யலாம். அந்த அப்பீல் வெற்றிகரமாக முடிந்தால் தொடர்ந்து அப்பீல் செய்ய முடியும்.அது கிடைத்த பின் பிறகு முடிவு எடுக்கப்படும். இந்த போட்டி தொடரில் பேட்டிங்கில் சிறப்பாக ஆடும் வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும்’ என்றார்.இதற்கிடையே ரசிகர்கள் மத்தியில் தோனி ரீவ்யு சிஸ்டம் என்ற டிஆர்எஸ்-ஐ கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.