அப்போது அவர் கூறியதாவது:”இந்தியாவில் 2021-ம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் போட்டித் தொடருக்கு பதிலாக டி20 உலகக்கோப்பை போட்டியாக நடத்தப்பட உள்ளது. இதற்கு இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளும் ஒப்புதல் அளித்துவிட்டனர்.
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் 8 அணிகள் மட்டுமே மோதும், ஆனால், டி20 உலகக்கோப்பை போட்டியில் 16 அணிகள் போட்டியிடும். இந்த மாற்றத்துக்கு பிசிசிஐ பிரதிநிதி அமிதாப் சவுத்ரியும் ஒப்புதல் அளித்துவிட்டார்.
இதன் மூலம் இரு ஐசிசி உலக டி20 போட்டிகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் நடைபெறும். அதாவது 2020-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை போட்டி நடக்கும். 2021-ம் ஆண்டில் இந்தியாவில் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு பதிலாக டி20 உலகக்கோப்பை போட்டியாக நடக்கும்.
டி20 போட்டிகள் உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது, மக்கள் மத்தியில் பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளைப் பெற்று வருவதால், இந்த மாற்றம் செய்யப்பட்டது. இதற்கிடையே 2019-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை போட்டி இங்கிலாந்தில் நடக்கிறது. 2023-ம் ஆண்டிலும் நடக்கிறது. 50 ஓவர்கள் கொண்ட சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடத்துவதை பெரும்பாலான நாடுகளின் உறுப்பினர்கள் விரும்பவில்லை. இதையடுத்து நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில் அந்த போட்டித் தொடர் நீக்கப்பட்டது. கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கேற்ப இதுபோன்ற மாற்றங்கள் வருவது இயற்கைதான்.
ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பையும், சாம்பியன்ஸ் டிராபி போட்டியும் ஏறக்குறைய ஒரேமாதிரியானதுதான். பின்பு ஏன் அப்படிப்பட்ட ஒரேமாதிரியான போட்டியை நடத்த வேண்டும். இந்த இருபோட்டிகளையும் வேறுபடுத்திக் காட்டுவதும் கடினமானதாக இருக்கிறது.
அதேபோலவே 2020-ம் ஆண்டில் நடக்கும் டி20 உலகக்கோப்பையும், 2021-ம் ஆண்டில் நடக்கும் டி20 உலகக்கோப்பையும் வேறுபடுத்திக் காட்டுவது கடினம்தான். ஆனால்,எதிர்காலத்தில் 2ஆண்டுகளுக்கு ஒருமுறை டி20 உலகக்கோப்பை போட்டியும், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை 50 ஓவர்களுக்கான உலகக்கோப்பை போட்டியும் நடத்தும்வகையில் மாற்றப்படும்”.இவ்வாறு ரிச்சர்ட்சன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.