என் பெயரை பயன்படுத்துவதை நிறுத்துங்கள் ! மகேந்திர சிங் தோனி தனியார் நிறுவனம் மீது வழக்கு !

Default Image

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, அனுமதியின்றி தனது பெயர் பயன்படுத்துவதாக  தொடர்ந்த வழக்கில் தனியார் நிறுவனத்துக்கு டெல்லி  நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பல தனியார் நிறுவனங்களுக்கு விளம்பரத் தூதராக இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி செயல்பட்டு வருகிறார். உலகளவில் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர் என்பதால் விளம்பரம் மூலமாகவே ஆண்டொன்றுக்கு பல நூறு கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்.

இந்நிலையில், தன்னுடனான ஒப்பந்த காலம் முடிந்த பின்பும் தனது பெயரை பயன்படுத்தி விளம்பரம் செய்து வருவதாக மேக்ஸ் மோபிலிங்க் எனும் தனியார் நிறுவனத்தின் மீது மகேந்திர சிங் தோனி, டெல்லி  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், அந்த நிறுவனத்துடன் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் விளம்பர ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டது. இதையும் மீறி எனது பெயரையும், புகைப்படத்தையும் அவர்களின் நிறுவன விளம்பரங்களில் பயன்படுத்தி வருகின்றனர். எனவே அதை உடனடியாக நிறுத்தவும், இதுவரை பயன்படுத்தியதற்கான ஊதியத்தை வழங்குமாறும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அதன் உரிமையாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்