பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவை கடந்த 2006ஆம் ஆண்டு முதலே தன் மனதிற்கு பிடித்தமான நடிகை என்று தீபிகா குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள நட்சத்திர வீரர் பிராவோ புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை அணியில் இடம்பிடித்துள்ள ஹர்பஜன் சிங், சமீபத்தில் ‘Quick Heal Bhajji Blast with CSK’ என்ற வெப் சீரீஸ் தொடர் ஒன்றை தொடங்கினார்.
இது உள்நாடு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் கலந்துகொள்ளும் சுவாரஸ்யமான டாக் ஷோ ஆகும்.
இதில் கலந்துகொண்ட மேற்கு இந்திய தீவுகளைச் சேர்ந்த நட்சத்திர வீரரான
டுவைன் பிராவோவிடம், ஹர்பஜன் சிங் சுவாரஸ்யமான கேள்விகளை முன்வைத்தார்.
தனக்கு பிடித்த நடிகை யார் என்று பிராவோவிடம் கேட்ட போது, அவர் சற்றும் தாமதிக்காமல் தீபிகா படுகோனே என்று தெரிவித்தார். அத்துடன் தீபிகா குறித்து மனம் திறந்து சில தகவல்களையும் அவர் கூறினார்.
2006ல் முதல் முறையாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கலந்துகொள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி சார்பில் கலந்து கொள்ள முதல் முறையாக இந்தியா வந்த போது, ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாகவும், அப்போது அந்த அறையில் இருந்த டிவியை ஆன் செய்த போது, சோப் விளம்பரம் ஒன்றில் தீபிகா தோன்றியதை பார்த்த பிராவோ, அப்போது முதல் இப்போது வரை தீபிகாவே தனக்கு பிடித்தமானவர் என்று கூறினார்.
மேலும், தீபிகாவை நேரில் சந்திக்க விரும்புவதாகவும், அவருடன் பேச ஆவலாய் உள்ளதாகவும், இதுவே தன்னுடைய கனவாக இருப்பதாகவும் பிராவோ குறிப்பிட்டார்.
இதையடுத்து, மேற்கு இந்திய தீவுகளில் தீபிகா போன்று எந்தப் பெண்ணையும் பார்க்கமுடியவில்லையா என்று ஹர்பஜன் கேட்டதற்கு, உங்களால் வேறொரு தீபிகாவை பார்க்க முடியாது, ஏனெனில் ஒரே ஒரு தீபிகா மட்டுமே இருக்கிறார் என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…