இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து தொடரை முன்னிட்டு அங்கு கவுன்ட்டி கிரிக்கெட்டில் ஆட பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது.
சரே அணிக்கு அவர் ஆடலாம் என்று கூறப்பட்டலும் ஒப்பந்தம் என்று எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து தொடரை முன்னிட்டு அங்கு கவுன்ட்டி கிரிக்கெட்டில் ஆட பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது.
சரே அணிக்கு அவர் ஆடலாம் என்று கூறப்பட்டலும் ஒப்பந்தம் என்று எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் ஐபிஎல் முடிந்த பிறகு ஜூன் மாத சீசனுக்கு அவர் இங்கிலாந்து செல்லலாம். அது இந்தியா இங்கிலாந்து தொடருக்குச் செல்லும் போது இன்னமும் அங்கு தன்னை நிலைநாட்டாத கோலிக்கு ஒரு அனுபவமாக இருக்கும் என்று கருதப்படுகிறது, இதனால் ஆப்கானுக்கு எதிரான வரலாற்று டெஸ்ட் போட்டியில் விராட் கோலி ஆடுவது சந்தேகம்தான்.
இதனையடுத்து என்.டி.டிவிக்கு விராட் கோலி கூறியதாவது,கவுன்ட்டி கிரிக்கெட் ஆடுவது என் ஆட்டத்தை மேம்படுத்த உதவும். இது இன்னும் நம்மை போட்டிமனப்பான்மையுடன் சவால்களுடன் பிணைக்கும் விஷயமாகும்.
ஆனாலும் முன்னமேயே அங்கு சென்று ஆடுகிறோம் என்பதாலேயே நாம் அங்கு நன்றாக ஆடுவோம் என்பதற்கு எந்த வித உத்தரவாதங்களும் இல்லை.
இதன் மூலம் நமக்கு நாமே வாய்ப்புகளை பெருக்கிக் கொள்கிறோம் அவ்வளவே. அதாவது நமக்கு பழக்கமில்லாத ஒரு சூழலை நாம் தன்வயப்படுத்திக் கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பு என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறினார்.
இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது, முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்குகிறது.
2014 தொடரில் இசாந்த் சர்மாவின் அபார ஸ்பெல் முன்னதாக ரஹானேயின் அதியற்புத சதம் ஆகியவற்றினால் லார்ட்ஸில் இந்தியா வெற்றி பெற்று முன்னிலை வகித்தாலும் அதன் பிறகு தொடரை 1-3 என்று இழந்தது. கோலி அந்தட் தொடரில் ஒரு அரைசதம் கூட எடுக்கவில்லை, ஜேம்ஸ் ஆண்டர்சனின் செல்லப்பிள்ளையாக அவரிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…