ஐசிசியில் இல்லாத புதிய கிரிக்கெட் விதியை அறிமுகப்படுத்தும் ஐபிஎல்.!
ஐசிசி விதிகளில் இல்லாத புதிய விதியை, வரும் ஆண்டு தொடர் முதல் ஐபிஎல் அறிமுகப்படுத்துகிறது.
இந்தியாவில் நடத்தப்படும் பிரபல கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரானது கடந்த 15 ஆண்டுகளாக 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் கடந்த 2022 ஆம் ஆண்டில் 15 சீசனை நிறைவு செய்தது.
தொடங்கியது முதல் பல நாட்டு கிரிக்கெட் வீரர்களும் விரும்பி வந்து பங்கேற்கும் இந்த ஐபிஎல் தொடர் ஆனது உலகெங்கும் பிரபலம் அடைந்த கிரிக்கெட் தொடராக கருதப்படுகிறது. ஐபிஎல்லில் விளையாடுவது பல நாட்டு கிரிக்கெட் வீரர்களின் கனவாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் ஐசிசியின் விதிகளில் இல்லாத புதிய கிரிக்கெட் விதியை ஐபிஎல் நிர்வாகம் வரும் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்துகிறது.
ஒவ்வொரு அணியிலும் 11 வீரர்கள் விளையாடும் இந்த போட்டியில் நடுவில் அணிக்கு தேவையான மாற்றுவீரரை பயன்படுத்திக் கொள்ளலாம் எனும் புதிய விதி அறிமுகப்படுத்தவுள்ளது. கால்பந்து போன்ற பிரபலமான விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும் இந்த விதியானது கிரிக்கெட்டில் ஐசிசி விதிகளின்படி இதுவரை நடைமுறையில் இல்லை.
இதன்படி ஒவ்வொரு அணியிலும் யாராவது ஒரு வீரரை மாற்றிக் கொள்ளலாம் எனும் புதிய விதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. ஐபிஎல் தொடரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும் இந்த புதிய விதியானது கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல்லில் இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்டால், அது சோதனை முயற்சியாக ஐசிசியால் கவனத்தில் கொள்ளப்பட்டு, இதனால் வரும் காலங்களில் ஐசிசி இந்த புதிய விதியை நடைமுறையில் கொண்டு வரலாம் என்று நம்பப்படுகிறது.
View this post on Instagram