என்னடா இது ..? அரைமணி நேரத்தில் காலியான ஐபிஎல் டிக்கெட்டுகள் ..!
IPL 2024 : இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலின் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் பாதி போட்டிக்கான ஐபிஎல் அட்டவணையை மட்டுமே தற்போது வரை வெளியிட்டுள்ளது. ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த அட்டவணையில் சென்னை அணிக்கு 4 போட்டிகள் விளையாட வேண்டி இருந்தது.
அதில் முதல் போட்டியான நேற்றைய போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து சென்னை அணியின் 2-வது போட்டியாக வருகிற மார்ச் 26-ம் தேதி மீண்டும் சேப்பாக்கில் நடைபெற உள்ள போட்டியில் சென்னை அணியும், குஜராத் அணியும் மோதவுள்ளது.இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10 மணி அளவில் தொடங்கபட்டது.
சென்னை அணியின் முதல் போட்டியில் டிக்கெட்டின் விலை ரூ,1700 லிருந்து ரூ.7500 ஆக இருந்த நிலையில், தற்போது இந்த போட்டிக்கான அதிகபட்ச விலை ரூ.6000 ஆக குறைக்கப்பட்டிருந்தது. சென்னை அணி நிர்வாகம் முன் கூட்டியே அறிவித்தது போல சென்னை அணியின் அனைத்து போட்டிகளின் டிக்கெட்டுகளும் ஆன்லனில் மட்டுமே விற்கப்படும் என்பதால் இணையதள பக்கங்களும் முடங்காமல் இருந்தது.
ஆனால், இன்று ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் தொடங்கிய அரை மணி நேரத்திலேயே அனைத்து சென்னை போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது. இதனால், டிக்கெட் கிடைக்காத சென்னை அணி ரசிகர்கள் பெரும் வருத்ததில் இருந்து வருகின்றனர்.