IPL 2024 : சிஎஸ்கே போட்டிக்கான ஐபிஎல் டிக்கெட் இனி ஆன்லைனில் மட்டும் தான் ..!
IPL 2024 : இந்த ஆண்டில் தொடங்கவிருக்கும் ஐபிஎல் தொடரின் நடைபெற போகும் சிஎஸ்கே அணியின் போட்டிகளுக்கு வழங்கப்படும் டிக்கெட்டுகள் எல்லாம் இனி ஆன்லைனில் மட்டும் தான் பெற முடியும் என்று சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. நடைபெற போகும் இந்த ஐபிஎல் தொடர்க்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பானது நிலவி வருகிறது. அதற்கு மிக முக்கிய காரணம் ஐபிஎல் தொடரானது அனைவருக்கும் பிடித்தாலும் சிஎஸ்கே தோனியின் ரசிகர்கள் தான்.
Read More :- NZvsAUS : தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா ..! ஆறுதல் வெற்றியை கூட பெறாத நியூஸிலாந்து ..!
இந்த ஐபிஎல் தொடர் ‘தல’ தோனிக்கு கடைசி ஐபிஎல் தொடர் என தகவல்கள் வெளிவருகிறது. இதனால், தோனி ரசிகர்கள் கடைசியாக தோனியின் விளையாட்டை சென்னையில் பார்த்து ரசிப்பதற்கு காத்திருக்கின்றனர். இதனால், சென்னையில் நடக்கும் போட்டிக்கு டிக்கெட்டுகளின் டிமாண்ட்கள் அதிகமாக இருக்கும். அதனால், நேரில் சென்று டிக்கெட் எடுப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. அதனால், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் பொது ஏற்பட்ட சில கலகலப்பின் காரணமாக ப்ளெ-ஆப் போட்டியின் போதும் இந்த நடவடிக்கையை சிஎஸ்கே நிறுவனம் மேற்கொண்டது. தற்போது, இந்த தொடரின் ஆரம்பத்திலேயே இந்த முடிவை எடுத்தது மிகவும் நல்ல விஷயமாக ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது.
Read More :- ‘ தோனிக்கு அடுத்து சிஎஸ்கே கேப்டன் ரோஹித் தான் ‘- அம்பாதி ராயுடு
சென்னை போட்டிக்கான டிக்கெட்டுகள் எந்த வலைத்தளத்தில் கிடைக்கும் என்பது வருகிற நாட்களில் அதிகாரப்பூர்வமாக தெரியவரும். மேலும், நேரில் டிக்கெட்டை நிறைய நபர்கள் அதிக தொகைக்கு விற்பதால் இது போன்ற மோசடியை தடுக்கவும் இது போன்ற நடவடிக்கையை எடுத்துள்ளனர்.