செப்டம்பர் 19 ஆம் தேதி ஐபிஎல் போட்டி மீண்டும் தொடங்குவதற்கு முன்னதாக, பெங்களூரு, ராஜஸ்தான் , பஞ்சாப் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் தங்கள் அணிகளுக்கு மாற்று வீரர்களை அறிவித்தனர்.
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட 14 வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) அறிவித்தது.
இதுவரை நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 29 லீக் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில், மீதம் 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அதன்படி, மொத்தம் 31 போட்டிகள் 27 நாட்களில் நடைபெறும். அக்டோபர் 15 ஆம் தேதி இறுதி போட்டி நடைபெறுகிறது.
செப்டம்பர் 19-ம் தேதி துபாயில் தொடங்கும் ஐபிஎல் தொடரில் முதல் போட்டியே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதவுள்ளது. இந்நிலையில், செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் போட்டி மீண்டும் தொடங்குவதற்கு முன்னதாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் , பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் தங்கள் அணிகளுக்கு மாற்று வீரர்களை அறிவித்தனர்.
மொத்தமாக ஒன்பது வீரர்கள் மாற்றப்பட்டுள்ளன. அதில் பெங்களூர் அணியில் 4 வீரர்களும், ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் தலா இரண்டு வீரர்களும், கொல்கத்தா அணியில் ஒருவரும் மாற்றப்பட்டுள்ளனர்.
அதன்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம்பெற்ற ஆடம் ஜாம்பாவுக்கு பதிலாக இலங்கையின் வனிந்து ஹசரங்கா மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் இலங்கையில் இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரில், ஹசரங்கா இறுதி டி 20 யில் 4 விக்கெட் உட்பட மொத்தம் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மேலும், பெங்களூர் அணியில் டேனியல் சாம்ஸுக்கு பதிலாக துஷ்மந்த சமீரா, கேன் ரிச்சர்ட்சனுக்கு பதிலாக ஜார்ஜ் கார்டன் மற்றும் நியூசிலாந்தின் ஃபின் ஆலனுக்கு பதிலாக டிம் டேவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சருக்குப் பதிலாக நியூசிலாந்து விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் க்ளென் பிலிப்ஸ்யும், ஆண்ட்ரூ டைக்கு பதிலாக தப்ரேஸ் ஷம்ஸி சேர்க்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் ரிலே மெரிடித்துக்கு பதிலாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ் , ஜை ரிச்சர்ட்சனுக்கு பதிலாக இங்கிலாந்தின் லெக் ஸ்பின்னர் ஆதில் ரஷித்தை தேர்வு செய்துள்ளது. கொல்கத்தா அணியில் பாட் கம்மின்ஸுக்கு மாற்றாக டிம் சவுதி தேர்வு செய்துள்ளனர்.
சென்னை : இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் தீபாவளி…
டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் …
தஞ்சை : மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல்…
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே…
ராஞ்சி : ஜார்கண்டில் மொத்தமாக உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த…