ஆட்டம் பாட்டத்துடன் தொடங்கிய ஐபிஎல்…ஸ்ரேயா கோஷல், திஷா பதானி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஐபிஎல் தொடக்கவிழாவில் பாடல் பாடுவதற்கு பாடகி ஷ்ரேயா கோஷல் 60 லட்சம் வரை சம்பளம் வாங்கியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொல்கத்தா : 18-வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதுகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பு தொடக்கவிழா ஆட்டம் பாட்டங்களுடன் நடைபெற்றது. பிரபல பின்னணி பாடகியான ஸ்ரேயா கோஷல் புஷ்பா 2 பாடல் மற்றும் வந்தே மாத்திரம் ஆகிய பாடல்களை பாடி நிகழ்ச்சியை தனது காந்த குரலால் தொடங்கிவைத்தார்.
அதன்பிறகு பாட்டு மட்டும் தான் இருக்கா? என ரசிகர்கள் பார்த்த நிலையில், இதோ உங்களுக்காக என்பது போல திஷா பதானி நடனம் ஆடினார். அவருடைய நடனத்தை பார்த்த ரசிகர்கள் கத்தி கரகோஷமிட்டனர். அவர் நடனம் ஆடிய வீடியோவும், ஸ்ரேயா கோஷல் பாடிய வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் இந்த தொடக்க விழாவில் அவர்கள் கலந்து கொண்டதற்கு எவ்வளவு சம்பளம் பெற்றுள்ளனர் என்கிற தகவலும் கிடைத்துள்ளது.
அதன்படி,…ஸ்ரேயா கோஷல் : பாடகி ஷ்ரேயா கோஷல் பொறுத்தவரையில் நேரலையில் பாடலை பாட ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் என்றால் அவர் சம்பளமாக 30 லட்சம் முதல் 60 லட்சம் வரை வாங்கி வருகிறார். எனவே, இந்த ஐபிஎல் தொடரிலும் அவர் சில பாடல்கள் மட்டுமே பாடியுள்ள காரணத்தால் 60 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
திஷா பதானி : அதைப்போல கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு நடனம் ஆடிய திஷா பதானி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடல்களுக்கு நடனம் ஆடுவதற்கு 50 லட்சம் முதல் 1 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார். எனவே, ஐபிஎல் தொடக்க விழாவில் நடனம் ஆடுவதற்கு சம்பளமாக 50 லட்சத்திற்கு மேல் வழங்கப்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.