IPL SRH vs DC: ஹைதராபாத் மிரட்டல் பந்துவீச்சு..! 144 ரன்களுக்கு சுருண்டது டெல்லி..!
ஐபிஎல் தொடரில் இன்றைய SRH vs DC போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி அணி 144/9 குவித்துள்ளது.
16-வது ஐபிஎல் தொடரில் இன்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் ஹைதராபாத்தின் ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர், முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
இதன்படி, டெல்லி அணியில் முதலில் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பிலிப் சால்ட் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். பிலிப் சால்ட் களமிறங்கிய வேகத்தில் வெளியேறிய நிலையில் வார்னர் 21 ரன்களுடன் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து, களமிறங்கிய மிட்செல் மார்ஷும் பவுண்டரிகளை பறக்கவிட்டு ஆட்டமிழந்தார்.
இதன்பின், அதிரடியாக களமிறங்கிய மணீஷ் பாண்டே மற்றும் அக்சர் படேல் அணிக்கு ரன்களை குவித்தனர். பொறுப்பாக விளையாடிக்கொண்டிருந்த அக்சர் படேல் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய பாண்டே ஆட்டமிழந்த நிலையில் அடுத்ததாக களமிறங்கிய டெல்லி அணியின் வீரர்கள் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
முடிவில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது. டெல்லி அணியில் அதிகபட்சமாக மணீஷ் பாண்டே 34 ரன்களும், அக்சர் படேல் 34 ரன்களும், மிட்செல் மார்ஷ் 25 ரன்களும், டேவிட் வார்னர் 21 ரன்களும் குவித்துள்ளனர். ஹைதராபாத் அணியில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.