சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டன் இவர்தான்.! ரசிகர்கள் உற்சாகம்.!

- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் கேப்டனாக நியமனம்.
2020-ம் ஆண்டு 13வது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் 29ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்றுள்ளனர். அதில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சன்ரைசர்ஸ் அணி ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
????Announcement????#OrangeArmy, our captain for #IPL2020 is @davidwarner31. pic.twitter.com/lV9XAMw6RS
— SunRisers Hyderabad (@SunRisers) February 27, 2020
இதனிடையே கடந்த 2018ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் கேப்டனாக இருந்த டேவிட் வார்னர், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஓராண்டு தடை பெற்றார். இதனால், சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு, நியூஸிலாந்து வீரர் வில்லியம்சனிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் தடைக்காலம் முடிந்து கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடிய வார்னர், வில்லியம்சன் தலைமையின் கீழ் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!
April 16, 2025
இறுதி வரை திக் திக் ஆட்டம்… பஞ்சாப் த்ரில் வெற்றி.., கொல்கத்தாவை மிரள வைத்த சாஹல் – மார்கோ.!
April 15, 2025
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025