ஐபிஎல் தொடரின் இன்றைய RR-DC போட்டியில் ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்து அதிரடியாக விளையாடி 199/4 ரன்கள் குவிப்பு.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் கவுகாத்தியில் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது.
தொடக்க வீரர்களான பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் ராஜஸ்தான் அணிக்கு அதிரடி தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். டெல்லியின் பந்துவீச்சை நாலாபுறமும் பவுண்டரிகள், சிக்ஸர்கள் என அடித்து நொறுக்கினர்.
ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்த நிலையில் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு களமிறங்கிய சாம்சன் முதன்முறையாக இந்த தொடரில் டக் அவுட் ஆகி வெளியேறினார். ஒருபுறம் பட்லர் அடித்து ஆடி அரைசதம் கடந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பட்லர் 79 ரன்களில் முகேஷ் குமார் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
கடைசியாக இறங்கிய ஜுரேல், ஹெட்மயருக்கு(39* ரன்கள்) துணையாக அதிரடி காட்ட ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. டெல்லி அணி சார்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
சென்னை : தந்தை பெரியார் பற்றி நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் கடும்…
டெல்லி : அரசு வேலை வாங்கி தருவதாக 100க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி, அதிமுவின் இரட்டை இலை சின்னத்தை…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி…
சென்னை: 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' அதுவே 'போக்கி' பண்டிகை என்றாகி தற்போது போகி என மருவியுள்ளது. சென்னையில் பல்வேறு…
ராஜ்கோட்: மகளிருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 116 ரன்கள் வித்தியாசத்தில்இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள்…
கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில்…