IPL RR vs LSG: டாஸ் வென்றது ராஜஸ்தான் அணி; லக்னோ முதலில் பேட்டிங்.!
ஐபிஎல் தொடரின் இன்றைய RR vs LSG போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பவுலிங் தேர்வு.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவை மன்சிங் ஸ்டேடியத்தில் விளையாடுகின்றன. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரு துறைகளிலும் வலிமையான அணியாகவே இரண்டு அணிகளும் கருதப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 8 புள்ளிகளுடன் முதலிடத்திலும், லக்னோ அணி 5 போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. லக்னோ அணி, தனது கடைசி போட்டியில் பஞ்சாப் அணியுடன் தோல்வியையும், ராஜஸ்தான் அணி தனது கடைசி போட்டியில் குஜராத் அணியுடன் வெற்றி பெற்றும் இருக்கின்றன.
இந்த நிலையில் இன்று இரு அணிகளும் வெல்வதற்கான முனைப்பில் களம் காணுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ராஜஸ்தான் அணி: ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(W/C), ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்
லக்னோ அணி: கேஎல் ராகுல்(C), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன்(W), ஆயுஷ் படோனி, நவீன் உல் ஹக், அவேஷ் கான், யுத்வீர் சிங் சரக், ரவி பிஷ்னோய்