ஐபிஎல் தொடரின் இன்றைய RR vs LSG போட்டியில், லக்னோ அணி முதலில் பேட் செய்து 154/7 ரன்கள் குவித்துள்ளது.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவை மன்சிங் ஸ்டேடியத்தில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன், முதலில் லக்னோ அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
இதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணிக்கு, ராகுல் மற்றும் மேயர்ஸ் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த கேப்டன் ராகுல் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து படோனி(1) மற்றும் தீபக் ஹூடா(2) ரன்களில் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.
மறுபுறம் அரைசதம் அடித்த நிலையில் மேயர்ஸ்(51 ரன்கள்) அஸ்வின் பந்தில் போல்டாகி விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பிறகு ஸ்டோனிஸ்(21 ரன்கள்) மற்றும் பூரன்(28 ரன்கள்) இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை ஓரளவு உயர்த்தினர். முடிவில் லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 154 ரன்கள் குவித்துள்ளது. ராஜஸ்தான் அணி தரப்பில், அஸ்வின் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…