IPL: ராஜஸ்தான் மிரட்டல் பந்துவீச்சு; டெல்லி அணி படுதோல்வி.!

Published by
Muthu Kumar

ஐபிஎல் தொடரின் இன்றைய RR-DC போட்டியில், ராஜஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி.

RRvsDC:                                                                                                                        16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் கவுகாத்தியில் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கி அதிரடி காட்டியது.

அதிரடி பேட்டிங்:                                                                                          தொடக்க வீரர்களான பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் டெல்லியின் பந்துவீச்சை நாலாபுறமும் பவுண்டரிகள், சிக்ஸர்கள் என அடித்து நொறுக்கினர். ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்த நிலையில் 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சாம்சன் டக்:                                                                                                          அதன்பிறகு களமிறங்கிய சாம்சன் முதன்முறையாக இந்த தொடரில் டக் அவுட் ஆகி வெளியேறினார். ஒருபுறம் பட்லர் அடித்து ஆடி அரைசதம் கடந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பட்லர் 79 ரன்களில் முகேஷ் குமார் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

200 ரன்கள் இலக்கு:                                                                                            கடைசி நேரத்தில் ஹெட்மயர்(39* ரன்கள்) அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. டெல்லி அணி சார்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

டெல்லிக்கு அதிர்ச்சி:                                                                                                200 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு அதிர்ச்சியாக முதல் ஒவரிலேயே ஷா மற்றும் மனிஷ் பாண்டே இருவரும் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினர். அதன்பிறகு இறங்கிய ரோஸோவ் 14 ரன்களில் ஆட்டமிழக்க, லலித் யாதவ், கேப்டன் வார்னருடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் கொடுத்தார்.

வார்னர் அரைசதம்:                                                                                    அதிரடியாக விளையாடிய லலித் யாதவ் 38 ரன்களுக்கு, போல்ட் வீசிய பந்தில் போல்டானார். கேப்டன் வார்னர்(65 ரன்கள்) தனியாக போராடி அரைசதமடிக்க, மறுபுறம் விக்கெட்கள் விழுந்தவண்ணம் இருந்தது. முடிவில் டெல்லி அணி 142 ரன்கள் மட்டுமே அடிக்கமுடிந்தது, இதனால் RR அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணி சார்பில் மிரட்டலாக பந்து வீசிய ட்ரென்ட் போல்ட் மற்றும் சாஹல் தலா 3 விக்கெட்களும், அஸ்வின்  2 விக்கெட்களும்  வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்.

Published by
Muthu Kumar

Recent Posts

பெரியாரை விமர்சிப்போரை அடையாளம் காட்ட விரும்பவில்லை…  மு.க.ஸ்டாலின் ‘சைலன்ட்’ விமர்சனம்! 

பெரியாரை விமர்சிப்போரை அடையாளம் காட்ட விரும்பவில்லை…  மு.க.ஸ்டாலின் ‘சைலன்ட்’ விமர்சனம்!

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…

14 hours ago

மகா கும்பமேளா 2025-12 வருடங்களுக்கு ஒருமுறை வர காரணம் என்ன தெரியுமா ?

இந்தியாவில் நடைபெறும்  மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…

14 hours ago

‘பெண்கள் படிக்கவே கூடாது!’ அடம்பிடிக்கும் ஆப்கான்! அழைப்பு விடுத்த பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…

14 hours ago

தினமும் எண்ணெய் தேய்க்கலாமா? கூடாதா? மருத்துவர்கள் கூறுவதென்ன?

தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…

15 hours ago

பொங்கல் டேஸ்டா வர இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…

15 hours ago

அஜித்குமார் ஏன் ரேஸில் பங்கேற்கவில்லை? அடுத்தகட்ட முடிவுகள் என்ன? முழு அறிக்கை இதோ…

துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…

16 hours ago