ஐபிஎல் ஏணியை எட்டிபிடிக்குமா தோனி படை….?சென்னைக்கு செக் வைத்து அச்சுருத்துமா டெல்லி..?இன்று மோதும் மட்டை காளைகள் ..!

Published by
kavitha

ஐபிஎல் திருவிழாவின் முக்கிய நிகழ்வை  எட்டியுள்ளது .அதன் ஒரு நிகழ்வாக குவாலிபையர் 2  சுற்று இந்த போட்டியில் நேரடியாக சென்னை மற்றும் டெல்லி  அணிகள் மோதுகின்றன. 

Related image

தோனி தலைமையிலான சென்னை அணியுடன் ஷிரேயாஸ்  ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணி மோதுகின்றது.அனுபவம் படைக்கும்  மற்றும் இளம்படைக்கும் நடக்கும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி குவாலிபையர் 1 ல் வெற்றி பெற்ற  மும்பை அணியானது குவாலிபையர் 2 வில் வெற்றி பெறும் அணியோடு இறுதிப்போட்டியில் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

அதன்படி சொந்த மண்ணில் சோபிக்க தவறிய சென்னை அணி இன்று விசாகப்பட்டனத்தில் இரவு 7.30 மணிக்கு டெல்லிக்கு எதிரான அணியோடு  நடைபெறும்  போட்டியில் களமிறங்கும்.

சென்னையை பொருத்தவரை பேட்டிங் திருப்தி இல்லை,தோனி மற்றும் அம்பத்தி ராயுடு ,ரெய்னா,டுபெலிசிஸ் தவிர மற்றவர்களின் பேட்டிங் சொல்லும் அளவிற்கு இல்லை.பவுலிங்கை பொருத்தவரை  இம்ரான் தாஹீர் , ஜடேஷா,  ஹர்பஜன்சிங்  போன்ற சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு ஜொலிக்கிறது.இவர்கள் மூவரும் இணைந்து இதுவரை 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

மேலும் இந்த போட்டியில் வேகபந்து வீச்சுக்கு தோனி வாய்ப்பளித்தால்  தீபக் சாஹர் நல்ல நிலையில் உள்ளதால் அவரை  களமிறங்குவார்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இனி அடுத்த பக்கம் சென்னையோடு முறுக்கி நிற்கும்  டெல்லி அணியை பார்த்தால்  பேட்டிங் பலமாக தான் உள்ளது.அதன்படி தவான், ஷிரேயாஸ் அய்யர், ரி‌ஷப் பந்த்,  பிரித்விஷா என்று எட்டி பார்க்கிறது.

 

பந்து வீச்சை பார்க்கும் போது கிறிஸ் மோரிஸ், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர்.

சென்னை தனது எட்டாவது தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று உள்ளே செல்லும் நோக்கில் சென்னை அணியும்,சென்னைக்கு செக் வைத்து  இறுதிப் போட்டிக்கு நுழையும் அதீத ஆர்வத்தில் டெல்லி அணியும்  உள்ளது.இதில் எந்த அணி வெற்றி பெருகின்றதோ அது மும்பையோடு 12 தேதி இறுதிப்போட்டியில் மோதுகிறது.

இதில் எந்த அணி வெற்றியை வேட்டையாடும் என்று  தங்களது தரமான கருத்தை பதிவிடுங்கள்

Published by
kavitha

Recent Posts

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…

6 hours ago

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…

6 hours ago

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…

6 hours ago

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

6 hours ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

6 hours ago

ஐபிஎல் 2025 -இல் நடக்கப்போகும் முக்கிய மாற்றங்கள்…இந்த அணிக்கு செல்கிறீர்களா ரோஹித்-ராகுல்?

சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…

7 hours ago