ஐபிஎல் ஏணியை எட்டிபிடிக்குமா தோனி படை….?சென்னைக்கு செக் வைத்து அச்சுருத்துமா டெல்லி..?இன்று மோதும் மட்டை காளைகள் ..!
ஐபிஎல் திருவிழாவின் முக்கிய நிகழ்வை எட்டியுள்ளது .அதன் ஒரு நிகழ்வாக குவாலிபையர் 2 சுற்று இந்த போட்டியில் நேரடியாக சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.
தோனி தலைமையிலான சென்னை அணியுடன் ஷிரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதுகின்றது.அனுபவம் படைக்கும் மற்றும் இளம்படைக்கும் நடக்கும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி குவாலிபையர் 1 ல் வெற்றி பெற்ற மும்பை அணியானது குவாலிபையர் 2 வில் வெற்றி பெறும் அணியோடு இறுதிப்போட்டியில் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி சொந்த மண்ணில் சோபிக்க தவறிய சென்னை அணி இன்று விசாகப்பட்டனத்தில் இரவு 7.30 மணிக்கு டெல்லிக்கு எதிரான அணியோடு நடைபெறும் போட்டியில் களமிறங்கும்.
சென்னையை பொருத்தவரை பேட்டிங் திருப்தி இல்லை,தோனி மற்றும் அம்பத்தி ராயுடு ,ரெய்னா,டுபெலிசிஸ் தவிர மற்றவர்களின் பேட்டிங் சொல்லும் அளவிற்கு இல்லை.பவுலிங்கை பொருத்தவரை இம்ரான் தாஹீர் , ஜடேஷா, ஹர்பஜன்சிங் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு ஜொலிக்கிறது.இவர்கள் மூவரும் இணைந்து இதுவரை 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
மேலும் இந்த போட்டியில் வேகபந்து வீச்சுக்கு தோனி வாய்ப்பளித்தால் தீபக் சாஹர் நல்ல நிலையில் உள்ளதால் அவரை களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இனி அடுத்த பக்கம் சென்னையோடு முறுக்கி நிற்கும் டெல்லி அணியை பார்த்தால் பேட்டிங் பலமாக தான் உள்ளது.அதன்படி தவான், ஷிரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், பிரித்விஷா என்று எட்டி பார்க்கிறது.
பந்து வீச்சை பார்க்கும் போது கிறிஸ் மோரிஸ், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர்.
சென்னை தனது எட்டாவது தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று உள்ளே செல்லும் நோக்கில் சென்னை அணியும்,சென்னைக்கு செக் வைத்து இறுதிப் போட்டிக்கு நுழையும் அதீத ஆர்வத்தில் டெல்லி அணியும் உள்ளது.இதில் எந்த அணி வெற்றி பெருகின்றதோ அது மும்பையோடு 12 தேதி இறுதிப்போட்டியில் மோதுகிறது.
இதில் எந்த அணி வெற்றியை வேட்டையாடும் என்று தங்களது தரமான கருத்தை பதிவிடுங்கள்