ஐபிஎல் மினி ஏலம்! எந்தெந்த வெளிநாட்டு வீரர்களுக்கு அதிக டிமாண்ட்.!
டிச-23 இல் நடைபெறும் ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக டிமாண்ட் உள்ள டாப் வெளிநாட்டு ஆல் ரவுண்டர் வீரர்கள் யார்?
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிச-23 ஆம் தேதி கொச்சியில் நடைபெறவிருக்கிறது. இந்த ஏலத்தை முன்னிட்டு 405 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். அதில் 273 இந்தியர்களும், 132 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர்.
இந்த மினி ஏலத்தில் குறிப்பாக ஆல் ரவுண்டர்களுக்காக அனைத்து அணிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எந்தெந்த வெளிநாட்டு வீரர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறித்து பார்ப்போம்.
இந்த பட்டியலில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ், அதிக எதிர்பார்ப்பு உள்ள வீரராக கருதப்படுகிறார். 2022இல் டி-20 உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறார், இதனால் இவரை எடுக்க அணிகள் போட்டாபோட்டி போடும் என்பதில் சந்தேகமில்லை.
இதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன், ஆல் ரவுண்டர்களில் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். இந்தியாவிற்கு எதிரான டி-20 தொடரில் அதிரடி காட்டி குறைவான பந்துகளில் அரைசதம் அடித்து கவனம் ஈர்க்கப்பட்டார்.
இங்கிலாந்து அணியின் 23 வயதான ஹாரி ப்ரூக், 2022இல் டி-20 உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த இவர் சமீபத்தில் பாகிஸ்தானின் டி-20 லீக் போட்டியில் 48 பந்துகளில் சதமடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக இங்கிலாந்து அணியின் சாம் கர்ரன், டி-20 உலகக்கோப்பை தொடரில் அதிகபட்ச விக்கெட் எடுத்தவர்கள் 13 விக்கெட்களுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இவர் ஏற்கனவே சிஎஸ்கே அணிக்காக விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏலம் நாளை மறுதினம் கொச்சியில் பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்குகிறது.