IPL MI vs SRH: டாஸ் வென்று ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு.!
ஐபிஎல் தொடரின் இன்றைய MI vs SRH போட்டியில் டாஸ் வென்று ஹைதராபாத் அணி முதலில் பவுலிங் தேர்வு.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள், ஹைதராபாத்தின் ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் விளையாடுகின்றன. மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் 4 போட்டிகளில் விளையாடி 2 இல் வெற்றி பெற்றுள்ளன.
ஐபிஎல் புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை மும்பை அணி 8-வது இடத்திலும், ஹைதராபாத் அணி 9-வது இடத்திலும் இருக்கின்றன. மும்பை அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் திரும்பவும் பழைய பார்முக்கு வந்துள்ளனர், ஆனால் பவுலிங்கில் அந்த அணி பும்ரா, ஆர்ச்சர் இல்லாமல் கொஞ்சம் திணறி வருகிறது.
ஹைதராபாத் அணியில் ஹாரி ப்ரூக் கடைசி போட்டியில் சதமடித்து பேட்டிங்கில் மேலும் வலு சேர்க்கிறார், பந்துவீச்சில் வலிமையான அணியாகவே ஹைதராபாத் இருக்கிறது. இன்றைய போட்டியில் வென்று முன்னேறி செல்வதற்கு இரு அணிகளும் போட்டி போடும் என்பதால் ஆரவாரத்திற்கு குறைவிருக்காது.
டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
மும்பை அணி: ரோஹித் சர்மா(C), இஷான் கிஷன்(W), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், கேமரூன் கிரீன், அர்ஜுன் டெண்டுல்கர், நேஹால் வதேரா, ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்
ஹைதராபாத் அணி: மயங்க் அகர்வால், ஹாரி புரூக், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம்(C), ஹென்ரிச் கிளாசென்(W), அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்