IPL MI vs GT: டாஸ் வென்றது மும்பை அணி; குஜராத் அணி முதலில் பேட்டிங் .!
ஐபிஎல் தொடரின் இன்றைய MI vs GT போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி, முதலில் பவுலிங் தேர்வு.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் குஜராத்திலுள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விளையாடுகின்றன. நடப்பு சாம்பியனான குஜராத் அணி, இந்த தொடரில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்திலும், மும்பை அணி 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளைப் பெற்று 7-வது இடத்திலும் இருக்கின்றன.
குஜராத் அணி, தான் விளையாடிய கடைசி போட்டியில் த்ரில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பேட்டிங் மற்றும் பவுலிங் என வலுவான நிலையில் இன்று வெல்லும் முனைப்பில் களம் காணுகிறது. மும்பை அணியைப் பொறுத்தவரை தொடர்ச்சியாக 3 வெற்றிகளைப்பெற்று முன்னேறி வந்த நிலையில், கடைசியாக விளையாடிய போட்டியில் பஞ்சாப் அணியுடன் போராடி தோல்வியுற்றது, இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் வென்று மீண்டும் தன் வலிமையை நிலைநாட்டும் முனைப்பில் இன்று களமிறங்குகிறது.
டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
மும்பை அணி: ரோஹித் ஷர்மா(C), இஷான் கிஷன்(W), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹால் வதேரா, குமார் கார்த்திகேயா, அர்ஜுன் டெண்டுல்கர், ரிலே மெரிடித், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்
குஜராத் அணி: விருத்திமான் சாஹா(W), சுப்மான் கில், ஹர்திக் பாண்டியா(C), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், முகமது ஷமி, நூர் அகமது, மோகித் சர்மா