IPL MI vs DC: டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பவுலிங்.!
ஐபிஎல் தொடரின் இன்றைய MI vs DC போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பவுலிங் தேர்வு.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள், டெல்லியின் அருண் ஜெட்லீ ஸ்டேடியத்தில் விளையாடுகின்றன. இரு அணிகளும் இந்த தொடரில் இன்னும் வெற்றி கணக்கை தொடராத நிலையில், இன்றைய போட்டியில் வெல்லும் முனைப்பில் களமிறங்குகின்றன.
டெல்லி அணி தான் விளையாடிய 3 போட்டியிலும் தோல்வியும், மும்பை அணி விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளிப்பட்டியலில் மும்பை அணி, 9-வது இடத்திலும் டெல்லி அணி 10-வது இடத்திலும் இருக்கிறது.
டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
டெல்லி அணி: பிருத்வி ஷா, டேவிட் வார்னர்(C), மனிஷ் பாண்டே, யாஷ் துல், ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்சர் படேல், அபிஷேக் போரல்(W), குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, முஸ்தபிசுர் ரஹ்மான்
மும்பை அணி: ரோஹித் சர்மா(C), இஷான் கிஷன்(W, கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நேஹால் வதேரா, ஹிருத்திக் ஷோக்கீன், ரிலே மெரிடித், அர்ஷத் கான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப்