தொடங்கப்போகும் ஐபிஎல் மெகா ஏலம்! 10 அணிகளின் இருப்புத் தொகை என்ன?
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நாளை தொடங்கவிருக்கும் நிலையில் ஒவ்வொரு அணியின் இருப்புத் தொகை எவ்வளவு என்பதை பார்ப்போம்.
துபாய் : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25 தேதிகளில் நடைபெறவுள்ளது. முன்னதாக ஐபிஎல் தொடருக்கான தக்க வைப்பு வீரர்களின் பட்டியலை கடந்த அக்.-31 அன்று பிசிசிஐ வெளியிட்டிருந்தது. அதன்படி, ஒவ்வொரு அணியும் தக்க வைத்த வீரர்களின் பட்டியல் ரசிகர்களை அதிர்ச்சியிலும், ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியது.
இதனால், 2 நாட்கள் நடைபெறவுள்ள இந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு என்பது இருந்து வருகிறது. அதன்படி, திங்கள்கிழமை (நவ-24, 25) மதியம் 3.30 மணி அளவில் மெகா ஏலத்தின் முதல் நாள் தொடங்கவுள்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, அடுத்த நாள் இரண்டாவது நாளுக்கான ஏலம் என்பது நடைபெறும் என தெரிவித்துள்ளனர். இந்த ஏலத்தில் எத்தனை வீரர்கள் உள்ளனர் மற்றும் எந்த நட்சத்திர வீரர்கள் ஏலத்தில் கலந்துக் கொள்ள உள்ளனர் என்பது நமக்கு தெரியும்.
ஆனால், இந்த ஏலத்தில் எந்த அணியிடம் அதிக இருப்புத் தொகை இருக்கிறது, எந்த அணியிடம் குறைவாக இருக்கிறது அதாவது ஒவ்வொரு அணியின் இருப்புத் தொகை எவ்வளவு என்பதைப் பற்றி பார்க்கலாம்.
அணிகளின் இருப்புத் தொகை :
- சென்னை அணி :- 55 கோடி
- மும்பை அணி :- 45 கோடி
- பெங்களூரு அணி :- 83 கோடி
- ஹைதராபாத் அணி :- 45 கோடி
- பஞ்சாப் அணி :- 110 கோடியே 50 லட்சம்
- லக்னோ அணி :- 69 கோடி
- குஜராத் அணி :- 69 கோடி
- டெல்லி அணி :- 73 கோடி
- ராஜஸ்தான் அணி :- 41 கோடி
- கொல்கத்தா அணி :- 51 கோடி
என இந்த அணிகளிடம் இவ்வளவு இருப்புத் தொகை இருக்கிறது. அதில் பஞ்சாப் அணியே அதிக தொகை வைத்திருப்பதால் நட்சத்திர வீரர்களை அந்த அணி வாங்கி குவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
மேலும், இந்த இருப்புத் தொகையில் தான் அணியில் மீதம் வீரர்களை எடுக்க வேண்டும். குறிப்பாக ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகிய முக்கிய வீரர்களுக்கு போட்டி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை, எனவே ஐபிஎல் ஏலத்திற்கு எதிர்பார்ப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.