நிறைவடைந்த ஐபிஎல் மெகா ஏலம்! சென்னை அணி வீரர்களின் முழு லிஸ்ட் இதோ!
இரண்டு நாட்களாக சவுதியில் பிரம்மாண்டமாக நடைபெற்று வந்த மெகா ஏலம் இன்றைய நாளுடன் நிறைவு பெற்றுள்ளது.

ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில், நேற்றைய நாள் இது வரை ஐபிஎல் வரலாற்றிலே ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு ஏலம் சென்றார். இதே போல சென்னை அணிக்காக அதிக தொகையில் நூர் அகமது ரூ.10 கோடி ரூபாய்க்கு ஏலம் சென்றார்.
மேலும், சென்னை அணியில் மொத்தமாக 20 வீரர்களை இந்த ஏலத்தில் அணியில் எடுத்துள்ளனர், மேலும் 5 வீரர்களை தக்க வைத்துள்ளனர் ஆகையால் மொத்தம் 25 வீரர்களை சென்னை அணி எடுத்துள்ளது. அவர்கள் யார் யார் எனவும் அவர்களை என்ன தொகைக்கு எடுத்துள்ளார்கள் என்ற விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை அணி
ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் :
- டெவோன் கான்வே – 6.75 கோடி
- ராகுல் திரிபாதி – 3.40 கோடி
- ரச்சின் ரவீந்திரா – 4 கோடி (ஆர்டிஎம்)
- ரவிச்சந்திரன் அஸ்வின் – 9.75 கோடி
- கலீல் அகமது – 4.80 கோடி
- நூர் அகமது – 10 கோடி
- விஜய் சங்கர் – 1.20 கோடி
- சாம் கர்ரன் – 2.40 கோடி
- ஷேக் ரஷீத் – 30 லட்சம்
- அன்ஷுல் கம்போஜ் – 3.40 கோடி
- முகேஷ் சவுத்ரி – 30 லட்சம்
- தீபக் ஹூடா- 1.70 கோடி
- குர்ஜப்னீத் சிங் – 2.20 கோடி
- நாதன் எல்லிஸ் – 2 கோடி
- ஜேமி ஓவர்டன் – 1.50 கோடி
- கமலேஷ் நாகர்கோடி – 30 லட்சம்
- ராமகிருஷ்ண கோஷ் – 30 லட்சம்
- ஸ்ரேயாஸ் கோபால் – 30 லட்சம்
- வான்ஷ் பேடி – 55 லட்சம்
- ஆண்ட்ரே சித்தார்த் – 30 லட்சம்
தக்கவைக்கப்பட்ட வீரர்கள் :
- ருதுராஜ் கெய்க்வாட் – 18 கோடி
- ரவீந்திர ஜடேஜா – 18 கோடி
- சிவம் துபே – 12 கோடி
- மதீஷா பதிரானா – 13 கோடி
- எம் எஸ் தோனி – 4 கோடி
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அன்னைக்கே தெரியும்..சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து ஷாம் என்ன சொன்னார் தெரியுமா?
February 25, 2025
ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!
February 25, 2025
இந்தி எது ஆங்கிலம் எது ? விமர்சனம் செய்த அண்ணாமலை!
February 25, 2025
பாக்., வீரர்களுக்கு சரியான சம்பளம் கொடுக்கலயா? சாம்பியன்ஸ் டிராபி தோல்விக்கு முன்னாள் வீரர் கடும் சாடல்.!
February 25, 2025