மிகவும் எதிர்பார்க்கப்பட்ட T20 தொடர் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான (ஐபிஎல்) அடுத்த ஐந்தாண்டுகளுக்கான(2023 முதல் 2027 வரையிலான) ஒளிபரப்பு ஊடக உரிமைகளுக்கான மின்-ஏலம்(E-auction) நேற்று தொடங்கிய நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது.இந்த ஏலத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI),சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா,டிஸ்னிஸ்டார்,Zee என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ், வியாகாம் உள்ளிட்டவை பங்கேற்றுள்ளன.
இதற்கிடையில்,ஏல செயல்முறை மொத்தம் நான்கு தொகுப்புகளாக (A, B, C மற்றும் D) பிரிக்கப்பட்டுள்ளது.பேக்கேஜ் A என்பது இந்தியாவில் போட்டியை ஒளிபரப்பு செய்வது,B தொகுப்பு என்பது இந்தியாவில் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்வது,C பேக்கேஜ் என்பது எக்ஸ்க்ளூசிவ் போட்டிகளை மட்டும் ஓடிடி ஒளிபரப்பு செய்வது,கடைசியாக,பேக்கேஜ் D என்பது இந்தியாவைத் தவிர உலகின் பிற பகுதிகளுக்கான ஒருங்கிணைந்த (டிவி மற்றும் டிஜிட்டல்) உரிமம் பெறுவதாகும்.
ஒவ்வொரு பேக்கேஜ்ஜின் அடிப்படை விலை:
இந்நிலையில்,ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம் ரூ.43,255 கோடிக்கு விற்பனை ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி,இந்தியாவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமம் ரூ.23,575 கோடிக்கும்,அதைப்போல,இந்தியாவில் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமம் ரூ.19,680 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனிடையே,சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனம் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…