ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 இல் ஆரம்பம்..??

- ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 இல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வருடத்தில் ஐபிஎல் போட்டிகள் கொரோனா காரணத்தால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டன. ஆனால், இந்த வருட போட்டிகள் இந்தியாவில் நடத்தப்பட்டு வந்த நிலையில் கொரோனா பாதிப்புக்காரணமாக பாதியிலேயே இப்போட்டிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஏனென்றால், இப்போட்டியில் பங்கு கொண்ட சில கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இம்முடிவு எடுக்கப்பட்டது.
ஐபிஎல் போட்டிகளில் 60 ஆட்டங்கள் நடைபெற இருந்த நிலையில் 29 ஆட்டங்கள் மட்டுமே நிறைவடைந்திருந்தது. இதனால் மீதி ஆட்டங்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தவுள்ளதாக பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது.
தற்போது ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 இல் தொடங்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன் இறுதி ஆட்டம் அக்டோபர் 15 இல் முடியவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. தற்போது இப்போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் பங்கு பெறுவதற்காக அவர்களின் நாட்டில் உள்ள கிரிக்கெட் வாரியங்களிடம் பிசிசிஐ பேசி வருகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025