#IPL 2024: முதல் போட்டியில் மோதும் CSK மற்றும் RCB..! இதுவரை அதிக முறை வென்ற அணி எது?
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக துவங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இருப்பினும் தேர்தல் நடைபெற உள்ளதால் அதை மையப்படுத்தி இம்முறை முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணையை மட்டுமே தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அதன் படி மார்ச் 22ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்கும் இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் நிலையில் இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சேப்பாக்கத்தில் இரு அணிகளும் விளையாடிய போட்டிகள் மற்றும் வெற்றி பெற்ற அணி எது என்பது குறித்து காண்போம்.
2008 – ஆர்.சி.பி வெற்றி
2010 – சென்னை வெற்றி
பின்னர் நடைபெற்ற 2011,2011,2012,2013,2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகள் நடைபெற்ற போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
#IPL 2024 : சென்னையில் முதல் போட்டி ..! வெளியானது ஐபிஎல் அட்டவணை..!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகள், (நடைபெறும் இடங்கள்)
மார்ச் 22, மாலை 7.30 : சென்னை – பெங்களூரு (சென்னை)
மார்ச் 26, மாலை 7.30 : சென்னை – குஜராத், (சென்னை)
மார்ச் 31, மாலை 7.30 : டெல்லி – சென்னை, (விசாகப்பட்டினம்)
ஏப்ரல் 5, மாலை 7.30 : ஹைதராபாத் – சென்னை, (ஐதராபாத்)