பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஐபிஎல் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெறும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
உலகளவில் ஐ.பி.எல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால், இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், இந்தாண்டு ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி தொடங்கும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, பயிற்சி ஆட்டத்தை முடித்துவிட்டு 8 அணிகளை சார்ந்த வீரர்கள், ஊழியர்கள் என அனைவரும் அமீரகம் சென்றடைந்தனர். இந்நிலையில், ஐபிஎல் தொடருக்காக கடந்த 21- ம் தேதி ஐக்கிய அமீரகம் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தி கொண்டனர்.
இந்நிலையில், நேற்று மேற்கொண்ட பரிசோதனையில் தீபக் சாஹர் மற்றும் ஊழியர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒரு வீரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடைபெறுமா என்று அனைவர்க்கும் மத்தியில் கேள்வி எழும்பியுள்ளது, மேலும் இதுகுறித்து சமீபத்தில் செய்தியாளர் சந்தித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி சந்திப்பில் கூறியது, ஐபிஎல் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெறும் என்று நம்புகிறேன்.மிக நீண்ட தொடர் என்பதால் எல்லாம் சிறப்பாக நடைபெறும் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். நான் எனது வேலையை வழக்கமாக தொடங்கியுள்ளேன் என்று கூறியுள்ளார்.
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…
சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர்…
சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும்…
மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…