ஐக்கிய அரபு அமீரகம் பிசிசிஐக்கு ஐபிஎல் போட்டிகளை தங்கள் நாட்டில் நடத்த கோரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக 2020 ஆம் ஆண்டுக்கான 13 வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் கொரோனா தாக்கம் குறைந்தால் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்பைவிட இருமடங்காக அதிகரித்து வருகிறது. இதனால் ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. கிரிக்கெட் போட்டியை விட மக்களின் நலனே முக்கியம் என்றுதான் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் தொடரை தங்கள் நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்தது. இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் பிசிசிஐக்கு ஐபிஎல் போட்டிகளை தங்கள் நாட்டில் நடத்த கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ நிறுவகத்தின் பொருளாளர் அருண் துமால் கூறுகையில், ஐபிஎல் போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் கோரிக்கை விடுத்துள்ளது என்றும் ஆனால் இப்போது உள்ள சூழ்நிலையில் சர்வதேச அளவில் எங்கும் பயணம் செய்ய முடியாது என கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பும், உடல் நலனும் இப்போது முக்கியம் என்றும் உலகமே பெரும் இழப்பை சந்தித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். இதனால் இப்போதைக்கு எங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது என கூறியுள்ளார். இதற்கிடையே கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றதன் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தரமான படைப்புகளை எப்போது ஏமாற்றம் அளிக்காமல் மக்களுக்கு கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய…
சென்னை: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு…
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…
சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…