CSK, RCB ரசிகர்களே., அடுத்த சம்பவத்திற்கு தயாரா? வெளியானது டிக்கெட் ‘தேதி’ அப்டேட்!
மார்ச் 28இல் நடைபெற உள்ள சென்னை, பெங்களூரு ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் நாளை வழங்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : சென்னை சேப்பாக்கத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் வித்தியாயசத்தில் வீழ்த்தியது. இதனை அடுத்து சென்னை அணியின் 2வது ஆட்டம் பெங்களூரு அணிக்கு எதிராக வரும் வெள்ளி (மார்ச் 28) அன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியும் சென்னையில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் 2025-ன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்திய தெம்புடன் பெங்களூரு அணி 2வது போட்டியை சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு எதிராக விளையாட உள்ளது. இரண்டு அணிகளும் முதல் போட்டியில் வென்றுள்ளதால் வரும் மார்ச் 28ஆம் தேதியன்று ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான டிக்கெட் விற்பனை பற்றிய முக்கிய அறிவிப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்டுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் நாளை (செவ்வாய்) காலை 10.15 மணிக்கு ஆன்லைன் வாயிலாக தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல இலவச டிக்கெட் பெற CSK ரசிகர்கள் பிரத்யேகமாக வினாடி-வினா போட்டிகளையும் நடத்துகிறது. அதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் அதிகாரபூர்வ CSK இணையதளத்தில் சென்று பதிவு செய்துகொள்ளலாம்.
பொதுவான வழிமுறைகள் :
அதிகாரப்பூர்வ தளங்களை மட்டுமே பின்பற்ற வேண்டும்.
ஆன்லைன் விற்பனையில், ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும்.
டிக்கெட்டோடு சேர்த்து கார் பார்க்கிங் மற்றும் இரு சக்கர வாகனம் நிறுத்துவதற்கான டிக்கெட்டும் வழங்கப்படும்.
பார்க்கிங் இடம் :
கலைவாணர் அரங்கம், PWD – வாலாஜா சாலையில் V பட்டாபிராமன் கேட் எதிரில், மெட்ராஸ் பல்கலைக்கழக வளாகம், ஓமுந்தூரார் மருத்துவக் கல்லூரி வளாகம், ரயில்வே கார் பார்க்கிங், விக்டோரியா விடுதி,
இலவச பயணம் :
சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிக்கான டிக்கெட் பெற்றவர்கள் மட்டும் சென்னை மெட்ரோ ரயில் மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றில் தங்கள் டிக்கெட்டுகளை காண்பித்து பயணித்து கொள்ளலாம்.
டிக்கெட் விலை :
ரூ.1700, ரூ.2500, ரூ.3,500, ரூ.4000, ரூ.7500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.