#IPL2020: இன்றைய போட்டி.. டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதல்! வெற்றிபெறப்போவது யார்?

Default Image

ஐபிஎல் தொடரின் இரண்டாம் நாளான இன்று, டெல்லி அணியும் பஞ்சாப் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி, துபாயில் நடைபெறவுள்ளது.

உலகளவில் ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா அதிகளவில் பரவி வரும் நிலையில், கொரோனா பரவலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் தொடங்கியது. அதன்படி முதல் போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதியது.

அபுதாபியில் நடைபெற்ற அந்த போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தநிலையில் இரண்டாம் போட்டியான இன்று, டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி, துபாயில் உள்ள துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்திய நேரப்படி மாலை 7:30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் ரஹானே இடம்பெற வாய்ப்புகள் கம்மி என டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங் தெரிவித்துள்ளார். மேலும் டெல்லி அணி, ஒரு தொடரில் கூட இறுதிசுற்று வரை வராத நிலையில், இந்தாண்டு சிறப்பாக விளையாடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamilnadu Live
janaNayagan - Vijay
arjun tendulkar AND yograj
DhonI - fast stumpings
salman khan and rashmika mandanna
Deepak Chahar - CSK - MI
MS Dhoni - Virat Kohli