IPL LSG vs PBKS: தனியாக போராடிய ராகுல்; பஞ்சாப் அணிக்கு 160 ரன்கள் இலக்கு.!
ஐபிஎல் தொடரின் இன்றைய LSGvsPBKS போட்டியில், முதலில் பேட் செய்த லக்னோ அணி 159/8 ரன்கள் குவிப்பு.
16-வது ஐபிஎல் தொடரின் இன்று 2 போட்டிகள் நடைபெறுகிற நிலையில், இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணியில், கைல் மேயர்ஸ்(29 ரன்கள்) மற்றும் ராகுல்(54 ரன்கள்) நல்ல தொடக்கம் அமைத்துக்கொடுத்தனர். இதன்பின் களமிறங்கிய தீபக் ஹூடா 2 ரன்களில் வந்தவேகத்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் ராகுலுடன் இணைந்து சிறிது நேரம் நிலைத்த க்ருனால் பாண்டியா 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பூரன்(0) முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
Safe hands ft. Shahrukh Khan ????????@PunjabKingsIPL gain momentum as #LSG lose both Krunal Pandya & Nicholas Pooran!@KagisoRabada25 with the crucial breakthroughs ????
Follow the match ▶️ https://t.co/OHcd6Vf5zU #TATAIPL | #LSGvPBKS pic.twitter.com/LUbO5VUc75
— IndianPremierLeague (@IPL) April 15, 2023
ஒருபுறம் ராகுல் நிதானமாக விளையாட மறுபுறம் விக்கெட்கள் (ஸ்டோனிஸ்-15 ரன்கள்) விழுந்தவண்ணம் இருந்தன. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ராகுல் 74 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். முடிவில் லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 159 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சாம் கரன் 3 விக்கெட்களும், ரபாடா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.