IPL KKRvsSRH: டாஸ் வென்று கொல்கத்தா அணி முதலில் பவுலிங் தேர்வு.!

Default Image

ஐபிஎல் தொடரின் இன்றைய KKR vs SRH போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலிங் தேர்வு.

16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதுகின்றன. கொல்கத்தா அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்திலும், ஹைதராபாத்  அணி 2 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும் இருக்கின்றன.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் முழு பலத்துடன் கொல்கத்தா அணி களமிறங்குகிறது. ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை, பந்துவீச்சில் சிறப்பாக விளையாடினாலும், அந்த அணியில் பேட்டிங் கொஞ்சம் வலுப்படுத்த வேண்டிய நிலையில் தான் இருக்கிறது, அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட ஹாரி ப்ரூக் சிறிது பேட்டிங்கில் திணறி வருவது அந்த அணிக்கு இழப்பாக கருதப்படுகிறது.

இரு அணிகளும் தங்களது கடைசி போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், இன்றைய போட்டியிலும் வெல்லும் முனைப்பில் களம் காணுகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

KKR அணி: ரஹ்மனுல்லா குர்பாஸ்(W), ஜெகதீசன், நிதிஷ் ராணா(C), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், சுயாஷ் சர்மா, லாக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி

SRH அணி: ஹாரி ப்ரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம்(C), அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென்(W), மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக், டி நடராஜன்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்