டெல்லி வயிற்றில் பாலை வார்த்த பால்..!கடைசி ஓவரில் அதிரடி..!!video உள்ளே
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகிறது .இந்த போட்டியானது, விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வந்த நிலையில் அதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
பேட்டிங் செய்ய களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணியானது சீரான ரன் வேட்டையின் போது தனது அடுத்தடுத்த விக்கெட்டுகளை டெல்லியிடம் இழந்தது.என்றாலும் 20 ஓவர் முடிவில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 162 ரன்களை எடுத்தது. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 163 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதன் பின்னர் தனது அதிரடியோடு களமிறங்கிய டெல்லி அணியானது.குறிப்பிட்ட இடைவேளையில் ரன் குவிப்பில் ஈடுபட்ட போது அதன் ரன் குவிப்பை உடைத்து சற்று ஆட்டம் காட்டியது ஹைதராபாத் இருந்த போதிலும் டெல்லி அணியின் ரிஷவ் பந்தின் அதிரடியால் தனது இலக்கை எட்டிய நிலையில் மேலும் கடைசி ஓவரில் ஒரு பந்திற்கு ஒரு ரன் என்று பதற்றம் பற்றிக்கொள்ளவே டெல்லி அணி தனது இலக்கை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் கடைசி ஓவரில் அணிக்கு பதற்றம் பற்றவே வெற்றி ஊசல் ஆடிக் கொண்டிருந்த போது தனது அணிக்கு இருந்த பதற்றத்தை தவிர்த்து வெற்றியை அணிக்கு வசப்படுத்தி வெற்றிக்கு வித்திட்டார் கீமோ பால் இதன் மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் – 165/8 (19.5 ஓவர்) டிரென்ட் போல்ட் 0 ,கீமோ பால்- 5 களத்தில் இருந்த நிலையில் தனது இலக்கை டெல்லி அடைந்தது.மேலும் இவருடைய முக்கியமான விக்கெட்டும் இன்று ஆட்டத்திற்கு வலு சேர்த்தது.
மேலும் டெல்லியின் இந்த வெற்றியின் மூலமாக 2 வது தகுதிச்சுற்றில் சென்னையோடு டெல்லி மோதுகிறது.இந்த போட்டியில் தோல்வியை தழுவிய ஹைதராபாத் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுகிறது.
Unconfined joy in the @DelhiCapitals camp ????#DC now play CSK in Qualifier 2 for a place in the final on Friday. #DCvSRH pic.twitter.com/U0PkOXs1A7
— IndianPremierLeague (@IPL) May 8, 2019