ஐபிஎல் தொடரின் இன்றைய CSK-MI போட்டியில் விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி.
எல் கிளாசிகோ: ஐபிஎல் தொடரில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் “எல் கிளாசிகோ” எனும், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்ற 12-வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கியது.
சென்னை அணி பவுலிங்: டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. இதன்படி களமிறங்கிய மும்பை அணி துவக்கத்தில் அதிரடியாக விளையாடியது. ஆனால் அது வெகுநேரம் நிலைக்கவில்லை. மும்பை அணி 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா 21(13) ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
மும்பை 157 ரன்கள்: அதன் பிறகு ரவீந்திர ஜடேஜாவின் அசத்தலான பந்துவீச்சில் இஷான் கிஷன் 32(21) , கேமரூன் க்ரீன் 12 (11) மற்றும் திலக் வர்மா 22 (18) ஆகியோர் விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்களும், துஷார் தேஷ்பாண்டே மற்றும் மிட்சேல் சான்ட்னர் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
ரஹானே அதிரடி: 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் டெவன் கான்வே(0) முதல் ஓவரில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் இறங்கிய ரஹானே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 2023 ஐபிஎல் தொடரின் அதிவேக அரைசதமடித்தார். 19 பந்துகளில் அரைசதமடித்த ரஹானே 61 ரன்களில் சாவ்லா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
சிஎஸ்கே வெற்றி: அதன்பின் களமிறங்கிய துபே 28 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ருதுராஜ்(40 ரன்கள்) அவ்வப்போது பவுண்டரிகள் விளாசி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். முடிவில் சென்னை அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…