48 வயதான வீரரை பல லட்ச ரூபாய்க்கு ஏலத்திற்க்கு எடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி…

Default Image
  • இந்தியாவில் மிகவும் சிறப்பாக கொண்டாடும் திருவிழாவில் ஒன்று இந்த ஐபிஎலும் அடங்கும்.
  • இதில் அதிக வயது வீரரை பல இலட்சத்திற்க்கு ஏலம் போன சுவையான நிகழ்வு.

கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் தனது 44-வது வயதில் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிக்காக சுழல்பந்து வீச்சாளராக  களமிறங்கியவர் பிரவின் தாம்பே. இவர் இந்த சீசனில் ஹாட்ரிக் விக்கெட்டுகளும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது 48 வயது நிரம்பிய சுழற் பந்து வீச்சாளரான பிரவின் தாம்பேவின் பெயர் 2020 ஐபிஎல் ஏலத்திலும்  அறிவிக்கப்பட்டது.இந்த ஏலத்தில்  இவரது அடிப்படை விலையாக  20 லட்சம் என  நிர்ணயிக்கப்பட்டது. ஆனால்,இவரை அதிக வயது காரணமாக எந்த அணியினரும் ஏலம் எடுக்கமாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில்  பெரிய ஆச்சரியமளிக்கும் வகையில் பிரவின் தாம்பேவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர்  20 லட்ச ரூபாய் என்ற அடிப்படை விலைக்கு இவரை ஏலம் எடுத்தனர்.இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி  ஏலம் எடுத்த போது மற்ற அணியை சேர்ந்த உரிமையாளர்கள் கைகளை தட்டி தங்களின் வரவேற்பு கொடுத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்