நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை பெறும் முனைப்பில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று களம் காணுகின்றன.
ஐக்கிய அமீரக அபுதாபியில் இன்று நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் 8வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் விளையாடு உள்ளன. இரண்டு அணிகளும் இதுவரை தலா ஒரு போட்டியில் விளையாடி உள்ளன. கொல்கத்தா அணி தனது முதல் போட்டியில் மும்பையிடம் 49ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அதேபோல் ஐதராபாத் அணியும் பெங்களூர் அணியிடம் 10 ரன் வித்தியாசத்தில் தோற்றது. ஐபிஎல் போட்டிகள் தொடங்கி ஒரு வாரம் முடிந்த நிலையில் இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காத அணிகளாக கொல்கத்தா, ஐதராபாத் அணிகள் மட்டுமே இருக்கின்றன. புள்ளிப் பட்டியலில் கடைசி 2 இடங்களில் இந்த இரண்டு அணிகளும் உள்ளன. அதனால் இன்றைய போட்டியில் வெற்றிப் பெற்று வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் கொல்கத்தா அணியின் தினேஷ் கார்த்திக்கும், டேவிட் வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணிகள் முயற்சி செய்யும். கூடவே யுஏஇயில் நிலவும் கடுமையான வெப்பத்துடனும் வீரர்கள் போராட வேண்டி இருக்கும்
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…