2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இனி வழக்கம் போல இந்தியாவில் நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா நெருக்கடி காரணமாக ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது, இதனால் 2020 ஆம் ஆண்டில் இருந்து குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே வைத்து நடைபெற்றது.
2020 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 4 இடங்களில் நடைபெற்றது, 2021 ஆம் ஆண்டில் இரண்டு பகுதிகளாக இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடைபெற்றது. 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் வைத்து நடைபெற்றாலும் பழைய முறைப்படி நடக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகள் இனி பழைய முறைப்படி ஒவ்வொரு அணியும் ஹோம் மற்றும் அவே (Home & Away) போட்டிகளில் விளையாடும் என சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.
மேலும் சவுரவ் கங்குலி, அடுத்த ஆண்டு மகளிருக்கான ஐபிஎல் தொடர் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தியாவில் மகளிருக்கான கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்காக அதிகமான கிரிக்கெட் போட்டிகள் மகளிருக்காக நடத்தப்படும் என்று சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
15 வயத்துக்குட்பட்ட மகளிருக்கான ஒருநாள் போட்டிகளை தொடங்கவுள்ளதாக அவர் கூறினார். உலக கிரிக்கெட்டில் மகளிருக்கான கிரிக்கெட் போட்டிகள் அமோக வரவேற்ப்பைப் பெற்றுள்ளது, அதனால் இளம் இந்திய மகளிருக்கு கிரிக்கெட்டில் நுழையும் வாய்ப்பை பிசிசிஐ, மேலும் எளிதாக்குகிறது என்று சவுரவ் கங்குலி தெறிவித்துள்ளார்.
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த…
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…